Health

உடலில் உள்ள கொழுப்பிற்கு அரும் மருந்தாகும் கொத்தமல்லி இலைகள்

By  | 

* அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய உணவு பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன.
கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும், மாச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

* புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.

* கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து உணவின் சுவையைக் கூட்டுகிறது.

* கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது. எனவே இது வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும்.

* கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்கிறது.முறையான மாதவிடாய் சுழற்சி உண்டாக உதவுகிறது.

* கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மருந்தாக உள்ளது. இது மறதியை கட்டுபடுத்தி நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.

* கொத்தமல்லி இலைகள் வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும். மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மைகொண்டது.

* உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துகொள்வதால்,ரத்த அழுத்தம் குறைவதாக நிருப்பிக்கப்பட்டுள்ளது.

* கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால்,உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *