
Astrology
மித்திரனின் வாரபலன் 02.09.2018 முதல் 08.09.2018 வரை
மேஷம்:மனதில் பலநாள் இருந்த கவலை மாறும். பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் வழிகாட்டுதலை தயக்கமுடன் பின்பற்றுவர். எதிர்ப்பாளர்களும் உங்கள் திறமையை கண்டு வியந்து விலகுவர். மனைவியின் அக்கறை மிகுந்த செயல் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும். பணியாளர்கள் சலுகைகளை இனிய அணுகுமுறையால் பெறுவர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
ரிஷபம்:உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். வாழ்வில் அதிர்ஷ்டகரமான நன்மை பெறுவீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணவேண்டாம். மனைவி கருத்து ஒற்றுமையுடன் செயல்படுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அரசு சார்ந்த உதவிபெற அதிக முயற்சி தேவைப்படும். பணியாளர்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறைகொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மிதுனம்:தாமதமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நண்பரை போன்று உங்களிடம் பழகுவர். வழக்கு, விவகாரத்தில் சமரச பேச்சுக்களால் அனுகூல தீர்வு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், ஆதாய பணவரவும் உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். திருப்திகர அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் சந்தோஷ வாழ்வு நடத்துவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கடகம்:கடந்த காலத்தில் உருவான சிரமம் குறையும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். தம்பி, தங்கையின் கருத்தை மறுத்து பேசவேண்டாம். பிள்ளைகள் பெற்றோரிடம் பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆலோசனை குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பயன்படும். தொழில், வியாபாரம் செழித்து வளர சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: புதன்
சிம்மம்:சிறு பணியிலும் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். உங்கள் பேச்சுக்களில் வசீகரம் நிறைந்திருக்கும். தம்பி, தங்கை உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளின் அறிவாற்றல் மேம்பட ஆலோசனை வழங்குவீர்கள். பகைவர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்துகொள்வார். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்புக்களை ஏற்று முன்னேறுவர். பெண்கள் உறவினரின் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகளை நடத்த உதவுவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கன்னி:நண்பரின் உதவி கிடைக்கும். தாமதமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த வெகுநாள் பிரச்சினைக்கு புதிய தீர்வு கிடைக்கும். மனைவியின் பாசத்தில் மனம் மகிழ்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்:வெள்ளி
துலாம்:மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். மதிநுட்பத்தினால் பணிகள் சிறப்பாக நிறைவேறும். உறவினர்களிடம் உங்கள் மீதான பாசம் வளரும். பிள்ளைகள் தனது நற்செயல்களின் பயனை முழு அளவில் அனுபவிப்பர். எதிர்ப்பாளரால் உருவான துன்பம் விலகும். மனைவியின் நல்ல கருத்து குடும்ப ஒற்றுமையை வளர்க்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து அந்தஸ்து பெருகும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் சுமுக சூழல் இருக்கும். பெண்கள் தாய்வீட்டு பாசத்தில் மகிழ்ச்சி அடைவர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
விருச்சிகம்:இனிய அணுகுமுறையால் அதிக நன்மை பெறுவீர்கள். பணிகளில் ஒருமுகத்தன்மை வளரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்களை ஒழுங்கு செய்வது நல்லது. விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். மனைவியின் அதிர்ஷ்டத்தினால் யோகபலன் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் லாபம் கிடைக்கும். பணியாளர் உத்வேகமுடன் பணிபுரிவர். பெண்கள் தாராள பணவரவில் விரும்பிய பொருட்கள் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி
தனுசு:உங்களை அறியாதவரிடம் சுய பெருமை பேசவேண்டாம். உறவினர் தரும் ஆதரவு மனதில் ஊக்கம் தரும். பிள்ளைகளின் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்திட உதவுவீர்கள். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் அதிக பாசமுள்ள செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய்வழி உறவினர்களின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி
மகரம்:வாழ்வில் மாறுபட்ட நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடலாம். பணிகளை புதிய உத்தி மூலம் நிறைவேற்றுவது நல்லது. குடும்பத்தினர் முழு மனதுடன் உதவி செய்வர். பிள்ளைகள் அறிவு, செயல்திறனில் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மனைவியின் அறிவார்ந்த செயலை பாராட்டுவீர்கள். தொழிலில் உருவான இடையூறு விலகி வளர்ச்சி கூடும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறைகொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
கும்பம்:புதியவர்களின் அன்பும், உதவியும் கிடைக்கும். திட்டமிட்ட முக்கிய பணி சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பிள்ளைகள் பெற்றோரின் கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வர். மனைவி குடும்ப ஒற்றுமையை பேணிக் காத்திடுவார். தொழில், வியாபாரம் புதிய வாடிக்கையாளர் ஆதரவில் செழிக்கும். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்துகொள்வர். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணம் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி
மீனம்:பொது இடங்களில் நிதானத்துடன் பேசுவது நல்லது. திட்டமிட்ட செயல் நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். பிள்ளைகள் புதியவர்களுடன் பழகும்போது கவனித்து வழி நடத்தவும். நோய் தொந்தரவு ஓரளவு குறையும். மனைவி சில விஷயங்களில் பிடிவாத மனதுடன் நடந்துகொள்வார். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலையை ஆர்வமுடன் ஏற்றுக்கொள்வர். பெண்கள் பிறருக்காக பணப்
பொறுப்பு ஏற்கவேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
0 comments