Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு

By  | 

எனக்கு வயது 31. என் கண­வ­ருக்கு 33. திரு­ம­ண­மாகி ஒரு மகள் இருக்­கிறார். கணவர் வெளி­நாட்டில் வேலை செய்து வரு­கிறார். அவர் கொடுத்­த­னுப்­பிய ஒரு பொதியை என்­னிடம் தரு­வ­தற்­காக என் கண­வ­ரது நண்பர் ஒருவர் வீட்­டுக்கு வந்தார். வீட்டில் யாரு­மில்­லா­ததைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு என்­னிடம் தவ­றான முறையில் கதைக்க ஆரம்­பித்தார். பயந்­து­போன நான் அவரை ஏசி அனுப்­பி­விட்டேன். இப்­போது என் கணவர் என்­னிடம் சரி­யாகப் பேசு­வ­தில்லை. மக­ளிடம் மட்டும் கதைப்பார். நான் கதைக்க முயற்­சித்தால் இரண்டு வார்த்தை பேசி­விட்டு வைத்­து­வி­டுவார். எனக்கு ஒரே குழப்­ப­மாக இருக்­கி­றது.

பதில்:
இன்­னுமா புரி­ய­வில்லை?
தனக்கு நேர்ந்த அவ­மா­னத்­துக்குப் பதி­லாக உங்கள் கண­வ­ரது நண்பர் உங்கள் கண­வரை பலிக்­க­டா­வாக்கி உங்­களைப் பழி­வாங்­கி­யி­ருக்­கிறார். இதுதான் நடந்­தி­ருக்க வேண்டும்.

தன் நண்­ப­னது மனை­வியைத் தங்­கை­யாகப் பார்க்­க­வேண்­டிய அந்தக் கயவன், தன்னைக் காப்­பாற்­றிக்­கொள்ள உங்­களைப் பற்றி உங்கள் கண­வ­ரிடம் அவ­தூ­றாகக் கூறி­யி­ருக்க வேண்டும். நீங்கள் அவ­ரிடம் தவ­றாக நடந்­து­கொள்ள முயற்­சித்­த­தா­கவோ அல்­லது உங்­க­ளுக்கும் வேறொ­ரு­வ­ருக்கும் தொடர்­பி­ருப்­பதை அவன் கண்ணால் கண்­ட­தா­கவோ உங்கள் கண­வ­ரிடம் பொய்­யாகக் கூறி­யி­ருக்க வேண்டும்.

தொலைக்­காட்சி நாட­கங்­களில் வில்லன் யார் என்­பதைப் பார்­வை­யா­ளர்கள் தெரிந்­து­கொண்­டாலும் அந்தக் கதா­பாத்­திரம் அறிந்­தி­ருப்­ப­தில்லை அல்­லவா? அது­போ­லத்தான் தன் நண்பர் சொன்­னதை முழு­மை­யாக நம்­பி­யி­ருப்பார் உங்கள் கணவர்.

இதை வைத்துப் பார்க்­கும்­போது, இந்தச் சம்­பவம் குறித்து நீங்கள் உங்கள் கண­வ­ரிடம் பகிர்ந்­து­கொள்­ள­வில்லை எனத் தோன்­று­கி­றது. சரிதான்! இம்­மா­தி­ரி­யான சமாச்­சாரங்களை கண­வ­ரிடம் பகிர்ந்து கொள்­வதில் ஒரு குழப்பம் பெண்­க­ளுக்குத் தோன்­று­வது சக­ஜம்தான். ஆனால், அதுதான் அந்தக் கய­வ­னுக்கு வாய்ப்­பாகப் போய்­விட்­டது.

இந்த நிலையில் நீங்கள் செய்­ய­வேண்­டி­ய­தெல்லாம், இனியும் தாம­திக்­காமல் இது­பற்றி உங்கள் கண­வ­ரிடம் கூறு­வதே! எடுத்த எடுப்பில் நீங்கள் சொல்­வதை உங்கள் கணவர் நம்ப மறுக்­கலாம். உங்கள் தவறை மறைப்­ப­தற்­கா­கவே நீங்கள் இவ்­வாறு கூறு­கி­றீர்கள் என்றும் அவர் சொல்­லலாம். ஏனென்றால், இதை­யெல்லாம் அந்தக் கயவன் முன்­கூட்­டியே சிந்­தித்து அதற்­கேற்­ற­ப­டியே உங்கள் கண­வ­ரிடம் திரித்துக் கூறி­யி­ருப்பான்.
எனவே, பொறு­மை­யாக எடுத்துக் கூறுங்கள். அவர் நம்ப மறுத்­தாலும் பர­வா­யில்லை. வேண்­டு­மானால், இந்தச் சம்­பவம் குறித்து அந்தக் கய­வ­னிடம் உங்கள் கண­வரைக் கேட்கச் சொல்­லுங்கள். அப்­போது அவ­னது முகமே அவனைக் காட்­டிக்­கொ­டுத்­து­விடும் என்­ப­தையும் கூறுங்கள்.
நீங்கள் உங்கள் கண­வ­ரிடம் இருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மைல்கள் பிரிந்­தி­ருக்­கி­றீர்கள். அப்­ப­டி­யி­ருக்க உங்கள் கூற்றில் உள்ள உண்­மையை உட­ன­டி­யாக உங்கள் கணவர் புரிந்­து­கொள்ள மாட்டார். எனவே, எது நடந்­தாலும் பொறு­மையை மட்டும் கைவிட்டு விடா­தீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *