Designs

பூக்களே நகைகளாக மாறிய காலம் இது!

By  | 

பொதுவாகவே திருமணங்களில் மணமேடை மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது என்னும் விஷயம் பழமையான பாரம்பரியத்தில் ஒன்று. ஆனால் இந்த நாட்களில், ஒரு திருமணத்தில் பூக்களின் பயன்பாடு வெறும் இடம் அலங்காரத்திற்கு மட்டும் அல்ல, சமீபத்தில் பூக்கள் இப்போது மணமகளின் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. அவைதான் மலர் நகைகள். தான் ஒப்பற்ற அழகி என்ற உணர்வை ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த மலர் நகைகள் மேலோங்க செய்கிறது. இதுவே பல மணப்பெண்கள் தங்கள் திருமணத்தன்று தங்க ஆபரணங்களை விடுத்து மலர் நகைகளை அணிவதற்கு காரணமாக உள்ளது.

 

     

  

உங்கள் திருமண விழாக்களில் புத்துணர்ச்சியூட்டும் மலர் நகைகள் அணிய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இங்கு சில முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் மலர் நகைகள் பலவித பாணிகளில் வருகின்றன.

*இயற்கையான பூக்களை வைத்தோ அல்லது செயற்கை பூக்களை வைத்தோ இந்த மலர் நகைகள் செய்யப்படுகிறது.

*நந்தியாவட்டம்,  ரோஜா பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.  ரோஜாவில் பல நிறங்கள் உள்ளதால் நாம் அணியும் ஆடையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் மலர்களை வடிவமைக்கலாம்.

*பொக்கேவிற்கு உபயோகிக்கும் ஆர்கிட் மலர்களை வைத்தும் செய்யப்படுகின்றன மலர் நகைகள்.

*இயற்கையான நிறங்களில் இருப்பதை விரும்புபவர்களும் உண்டு. பல வண்ணங்களில் கேட்பவர்களுக்கு செயற்கை நிறங்களை வைத்து கண்களை பறிக்கும் அளவிற்கும் செய்து தரப்படுகின்றன இந்த மலர் நகைகள்.

*விரைவில் வாடிவிடும் காரணத்தினால் மல்லிகையின் பயன்பாடு குறைவே. வழக்கமான தொகுப்பாக நெத்திச்சுட்டி, தோடு, நெக்லெஸ், ஹாரம், ஒட்டியாணம்,  பிரேஸ்லெட், கொலுசு அதில்லாமல் சிகை அலங்காரத்திற்கு ராக்கொடை எனப்படும் வேணி, ஜடபிள்ளை எனப்படும் சுட்டி போன்றவையும் வருகிறது.

 

 

*இன்னும் வித்தியாசமாக இருக்க விரும்பினால், மலர்களால் ஆன துப்பட்டாவைக் கூட நாடலாம். மலர் நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் மலர்களின் வகையை உங்கள் அலங்காரத்திற்கும் விருப்பத்திற்கும், உடையின் நிறத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

*பொதுவாக, மலர் நகைகளை தயாரிப்பதற்கு பூக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் பெரிய பூக்களை விட சிறிய பூக்களில் நகைகளை எளிதில் தயாரிக்கலாம்.

*மலர்களால் செய்யப்படுவது எளிதில் வாடி விடுமே என்று வருத்தம் இருந்தால் முதலில் அவ்வருத்தத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால் இந்த மலர் நகைகள் குளிரூட்டப்பட்டிருந்தால் மூன்று நாள் வரை வாடாமல் இருக்கும்.

*இந்த மலர் நகைகள் செய்ய ஒருநாள் முழுவதும் தேவைப்படுகிறது. ஆதலால் உங்கள் ஆர்டரை முன்கூட்டியே கொடுத்துவிடுவது நல்லது. மேலும் சில மலர் நகை வடிவமைப்பாளர்கள் மணப்பெண்ணை அல்லது சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களின் நிறம், முக வடிவம், ஆடையின் வடிவம் என எல்லாவற்றையும் பரிசீலித்து சிறந்த ஒன்றை உருவாக்கி தருவார்கள். மேலும் நீங்கள் அளவீட்டு சோதனைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லாதவாறு ஃப்ரீ சைஸில்தான் செய்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *