Cinema

ரசிகர்களை வியக்க வைத்த சிம்ரனின் புகைப்படம்

By  | 

தமிழ் சினிமாவில் 1990-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக பிரபல நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தவர் சிம்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தற்போது ரி- என்ட்ரி கொடுத்துள்ளார்.

சிவாவுடன் சீமராஜா படத்தில் வில்லியாகவும், துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது சிம்ரன் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு செம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி இந்த வயசுலயும் இவ்ளோ அழகா என ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *