Cookery

முந்திரி சிக்கன் கிரேவி செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • கோழியிறைச்சி – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 15
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • தயிர் – 1 மேசைக்கரண்டி
  • பால் – 2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை – பாதி
  • கொத்தமல்லி – சிறிது
  • எண்ணெய் – 1 மேசைக்கண்டி
  • உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

  • முந்திரி – 8
  • மிளகு – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • சோம்பு – 1/2தேக்கரண்டி
  • கசகசா – 1/4 தேக்கரண்டி
  • பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 4
  • புதினா – சிறிது

செய்முறை

*முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

*பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

*பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

*சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *