Cookery

பீன்ஸ் சப்ஜி செய்முறை!

By  | 

தேவையானபொருட்கள்

  • பீன்ஸ் – 15
  • வெங்காயம் – ஒன்று
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • காய்ந்தமிளகாய் – 2
  • கொத்தமல்லித்தூள் – அரை மேசைக்கரண்டி
  • சோம்பு – கால் தேக்கரண்டி
  • பூண்டு – 2 பல்
  • பட்டை – ஒரு துண்டு
  • புளி – சிறிய கோலிக்குண்டு அளவு
  • உப்பு – கால் தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 1 1/2 மேசைக்கரண்டி

செய்முறை

*வெங்காயம், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொத்தமல்லித்தூள், சோம்பு, பட்டை,  மற்றும் காய்ந்தமிளகாய் சேர்த்து கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

*வறுத்தப் பொருட்கள் ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு புளியை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

*அதே வாணலியில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

*வெங்காயம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய பீன்ஸை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

*அதில் வறுத்து அரைத்த பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.

*பிறகு பீன்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.

*பீன்ஸ் வெந்து அதிலுள்ள தண்ணீர் வற்றியதும் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து பிரட்டி விடவும்.

*தேங்காய்விழுது பீன்ஸுடன் ஒன்றாக கலந்ததும் இரண்டு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

*சுவையான பீன்ஸ் சப்ஜி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *