Women Achievers

சர்வதேச அளவில் சாதனை படைத்த அழகு கலை நிபுணர் கயல்விழி

By  | 

பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைப்பெற்ற சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் இரண்டாம் இடத்தை பிடித்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிஷில் இந்த போட்டி கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன், அவருக்கான பரிசில்கள் கடந்த 11 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் வெள்ளி பதக்கத்தை வெற்றி கொண்ட ஜெயபிரகாஷ் கயல்விழி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

 

இலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணராக ஜெயபிரகாஷ் கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

சர்வதேச ரீதியில் இடம்பெறும் அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக ஜெயபிரகாஷ் கயல்விழி வெள்ளிப்பதக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *