Cinema

சீனாவில் 10,000 தியேட்டர்களில் வெளியாகும் மெர்சல்

By  | 

மெர்சல் திரைப்படம் 10,000 தியேட்டர்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இது விஜய் – அட்லி கூட்டணியில் உருவான இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள் இருந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவற்றையும் தாண்டி, படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

வெளிநாடுகளில் மாஸ் திரைப்படமாக பெரும் லாபம் ஈட்டியது. இந்நிலையில் சீனாவில் 10,000 தியேட்டர்களில் மெர்சல் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவில் மொத்தம் 40,000க்கும் அதிகமான தியேட்டர்கள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *