Cookery

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபி

By  | 

பிள்ளையார்பட்டி மோதகம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • பாசிப்பருப்பு – 1/4 கப்
  • கருப்பட்டி – 3/4 கப்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன் + சிறிது
  • தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 2 மற்றும் 3/4 கப்

செய்முறை

*முதலில் பச்சரியை வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பாசிப்பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

*பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை போட்டு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து 3 நிமிடம் கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்பு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் நன்கு கரைந்து பாகு போன்று வந்ததும், அதில் மீதமுள்ள நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

*பிறகு அதில் வறுத்து வைத்துள்ள மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றி, சற்று கெட்டியானதும் சிறிது நெய் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும்.

*பின் அதில் தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1/2 கப்
கருப்பட்டி – 1/4 கப்
தண்ணீர் – 1 மற்றும் 1/4 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
எண்ணெய் – சிறிது

செய்முறை

*முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும்.

*கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

*பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும்.

*பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

*ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.

*மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *