Interview

குடிக்க நீர் இல்லாத கிராமத்திலும் காளான் செய்கை செய்யும் அனுசா

By  | 

அருள் சிங்கம் தங்கமலர் (அனுசா)

‘வேலை… வேலை…’ என அலைந்து திரி­வதை விடுத்து சுய தொழில் முயற்­சிக்­கான பயிற்­சி­யினை முறை­யாக பயில்­வதன் மூலம் சுய பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்க முடியும். கிரா­மத்­துக்கே தண்ணீர் பிரச்­சி­னை­யுள்ள நிலையில் நீண்ட தூரம் சென்று தண்­ணீரைப் பெற்று காளான் செய்கை மேற்­கொண்டு அதன் மூலம் குடும்­பத்தைக் காப்­பாற்றி மற்­ற­வர்­க­ளையும் ஊக்­கப்­ப­டுத்தி வரு­கின்றார் சுய­தொழில் முயற்­சி­யாளர் அருள் சிங்கம் தங்­க­மலர் (அனுசா).

யாழ்ப்­பாணம், வட்­டுக்­கோட்­டையில், ஜே 173 கிராம அலு­வலர் பிரி­வுக்­குட்­பட்ட அராலி கிழக்கு மெய்ஞ்­ஞான வைரவர் கோவி­ல­ருகே வசித்து வரும் அருள்­சிங்கம் தங்­க­மலர், அராலி கிழக்கு மாதர் சங்க தலை­வியும் திரு­நெல்­வேலி விவ­சாயத் திணைக்­க­ளத்தின் கீழுள்ள காளான் உற்­பத்­தி­யாளர் சங்க செய­லா­ள­ரு­மாவார்.

இவர் பல்­வேறு வகை­யான சமூக மட்ட அமைப்­புக்­களில் அங்­கத்­த­வ­ராக இருந்­த­படி சமூ­கப்­பணி, பொதுப்­ப­ணி­யாற்­றியும் தனது குடும்­பத்தை கவ­னித்­துக்­கொண்டும் சுய­தொழில் முயற்­சி­களில் ஈடு­பட்டு ஏனை­யோ­ரையும் அதில் ஊக்­கப்­ப­டுத்தி வரு­கிறார்.

தான் வசிக்கும் கிரா­மத்தில் குடி­நீ­ருக்­கா­கவே நீண்ட தூரம் சென்று நீர் பெற்று வரும் சூழலில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக காளான் செய்கை வெற்­றி­க­ர­மாக முன்­னேற்றி வரு­வ­தோடு அதன் மூலம் குடும்­பத்தின் பொரு­ளா­தாரத் தேவை­க­ளையும் சமா­ளித்­துக்­கொள்­கிறார் அனுசா. இன்னும் பல வாழ்க்கை அனு­ப­வங்­களை அவர் எம்­முடன் பகிர்ந்­து­கொண்டபோது,

“2016ஆம் ஆண்டு எமது பிரிவு கிராம அலு­வலர் மூலம் காளான் செய்­கைக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டது. ‘ஆர்வம் உடை­ய­வர்கள் பயன் பெறலாம் சுய­தொ­ழி­லா­கவும் இதனை செய்­யலாம்’ என்ற அறி­வித்தல் கிடைத்­த­தை­ய­டுத்து திரு­நெல்­வே­லியில் உள்ள விவ­சா­யப் பண்­ணையில் அதற்­கானபயிற்­சி­களை பெற்­றுக்­கொண்டேன்.

பயிற்­சிக்கு சென்ற பின்­புதான் காளானைப் பற்றி அறிந்­து­கொண்டேன். காளான் கறி சாப்­பிடத் தொடங்­கினேன். அதற்கு முன் அதைப் பற்­றி­யெல்லாம் அறிந்­த­தே­யில்லை. இத்­தொ­ழிலை முயற்­சிப்­பதில் ஆர்வம் செலுத்­தினேன். பிறகு துணிந்து செய்யத் தொடங்­கினேன்.

நான் ஆரம்­பத்தில் கோழி வளர்ப்பில் ஈடு­பட்டேன். அதுவும் சவால்கள் நிறைந்­த­தா­கவே இருந்­தது. எத்­த­கைய கவ­னிப்­புகள் இருந்­தாலும் நோய் வரும்­போது அனைத்­தையும் இழக்கும் நிலையே ஏற்­பட்­டது. இரண்டு, மூன்று தட­வைகள் அதே நிலை தொடர்ந்­தது. தற்­போது கோழி வளர்ப்பை கைவிட்­டு­விட்டு காளான் செய்­கையில் முழு­மை­யாக ஈடு­பட்­டு­வ­ரு­கிறேன்.

காளான் செய்­கைக்­கான திரு­நெல்­வே­லியில் உள்ள விவ­சாயப் பிரிவில் எனது பயிற்சி வகுப்பில் 30 பேர் ­ப­யிற்சி பெற்­றார்கள். ஆனால், யாரும் இதனை செய்­ய­வில்லை. அது­மட்­டு­மன்றி எமது கிரா­மத்தில் 6 பேர் பயிற்சி பெற்­றுள்ளபோதும் அவர்­களும் பின்­வாங்­கு­கி­றார்கள்.
நான் பயிற்சி பெற்­று­வந்­த­போதே என்­னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்­தினைக் கொண்டு சிறிய கொட்டில் அமைத்து எளி­மை­யாக காளான் செய்­கையில் ஈடு­பட்டேன். பயிற்சி முடிவில் விவ­சாயத் திணைக்­களம் மானிய அடிப்­ப­டையில் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்­தது. அந்த பணத்­தொகை போதா­தென கடன்­பட்டு சுமார் ஒரு லட்­சத்­துக்கு மேல் செல­வு­செய்து பிரத்­தி­யே­க­மாக ஓர் இடத்­தினை ஒழுங்­கு­ப­டுத்தி காளான் செய்­கையை மேற்­கொண்டேன்.

எனது முயற்­சி­களை பார்த்து பிர­தேச செய­லகம், சமுர்த்தி திணைக்­களம், இலங்கை கைத்­தொழில் அதி­கார சபை போன்ற திணைக்­க­ளங்கள் உத­விகள் செய்­தன. அவற்றின் மூலம் வெற்­றி­க­ர­மாக எனது குடும்­பத்தின் தேவையை நிறை­வேற்றி வரு­கிறேன்.

அப்பா, அம்மா, இரண்டு பிள்­ளைகள் என பெண் தலை­மைத்­துவ குடும்­பத்தில்தான் நான் வாழ்ந்து வரு­கின்றேன். எனது தந்தை கடல் தொழில் செய்து வரு­பவர். ஆனாலும் முந்­தைய காலம் போல் அவரால் தொழி­லுக்கு செல்ல முடி­வ­தில்லை. வயது மூப்­பி­னாலும் அதற்­கேற்ற நோயி­னாலும் இய­லாமை ஏற்­பட்டு சிர­மப்­பட்­டுத்தான் வேலை செய்­கிறார்.
என்னை பொறுத்­த­வ­ரையில் காளான் செய்கை வரு­மா­னமும் நல்ல இலா­பமும் தரும் தொழில். இதற்கு தன்­னம்­பிக்­கையும் பொறு­மையும் அவ­சியம்.

இத்­தொ­ழிலில் நான் அடுத்த கட்­டத்­துக்கு முன்­னேற இன்­னுமோர் இடம் தேவை­யாக உள்­ளது. அது­மட்­டு­மன்றி இங்கே நீரும் பிரச்­சி­னை­யாக உள்­ளது. எமது கிரா­மத்தில் உள்ள கிணற்று நீர் உவர் நீரா­கவே உள்­ளது. காளான் செய்­கைக்கு தூய்­மை­யான நீர், போதிய இட வசதி, காற்­றோட்டம், குளிர்ச்­சி­யான சூழல், சுத்தம் மிக முக்­கி­ய­மா­னவை.
வயல் கிணற்­றி­லி­ருந்து நீரை பெறு­வ­தற்கு நீண்ட தூரம் செல்ல வேண்­டி­யுள்­ளது. அதுபோல் பிர­தேச சபை மூலம் கிடைக்கும் நீரை பெறு­வ­தற்கும் நெடுந்­தூரம் செல்­ல­வேண்டும். எனினும், எனது தொழில் முயற்­சிக்­காக நீண்ட தூரம் சென்றே நீரைப் பெற்று வரு­கின்றேன். சில சம­யங்­களில் தந்­தையும் உத­வுவார்.

மேலும் காளா­னுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் மரத்­தூசு கலப்­படம் இல்­லா­த­தாக பெற்­றுக்­கொள்­வது சவா­லா­கவே உள்­ளது. அவற்றை விவ­சாயத் திணைக்­களம் தென்­னி­லங்­கையில் இருந்­துதான் கொண்­டு­வ­ரு­கி­றார்கள். யாழ்ப்­பா­ணத்தில் பெற்­றுக்­கொள்­வது மிகவும் சிரமம்.
என்னைப் பொறுத்­த­வரை காளானை சந்­தைப்­ப­டுத்தும் சிர­ம­மா­ன­தல்ல. அவற்றை விவ­சாயத் திணைக்­க­ளமே மேற்­கொள்­கி­றது. அவர்கள் எம்­மிடம் பெறு­கின்ற காளானை அவர்­களே சந்­தைப்­ப­டுத்தி எமக்­கான பணத்தை தரு­கி­றார்கள். ஒரு வரு­டத்­துக்கு இவ்­வ­ளவு பணம் என விலை நிர்­ணயம் செய்து வைப்­பதால் எமக்கு எந்த சிக்­கலும் ஏற்­ப­டாது.
விவ­சாய விற்­பனை நிலை­யத்தில் காளானை பெற்றுக்கொள்­வ­தற்கு வாடிக்­கை­யா­ளர்கள் முன்­ப­திவுசெய்தே வைத்­துள்­ளார்கள். அதனால் காளான் உடனே விற்­ப­னை­யா­கி­விடும். அத்­துடன் தென்­னி­லங்­கைக்கும் ஏற்­று­மதி செய்­யக்­கூ­டிய கேள்வி கோரல் இருக்­கின்ற போதும் அதனை உற்­பத்தி செய்­வ­தற்கு உற்­பத்­தி­யா­ளர்கள் போதி­ய­ளவு இல்­லாமை ஒரு குறை­யா­கவே உள்­ளது.

சில நிறு­வ­னங்கள், பல்­பொருள் அங்­கா­டிகள் காளான்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­ற­போதும் உற்­பத்­தி­யா­ளர்கள் குறை­வா­கவே உள்ளனர். அது மட்­டு­மன்றி பல்­பொருள் அங்­கா­டிகள் காளானை கொள்­வ­னவு செய்யத் தயா­ராக இருக்­கின்­ற­போதும் விற்­பனை செய்­யா­து­விட்டால் அதனை மீள உற்­பத்­தி­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிலை ஒன்­றி­ருப்­பதால் அவர்­க­ளிடம் எமது உற்­பத்­தி­களை விற்­பனை செய்­ய­மு­டி­யா­துள்­ளது.

சுய­தொழில் முயற்சி மூலம் முன்­னேற்­ற­க­ர­மான பொரு­ளா­தா­ரத்தை ஈட்­ட­மு­டியும். ‘வேலை­யில்லை’, ‘வேலை வேண்டும்’ என அலை­வதை விடுத்து சுய­மா­கவே முன்­னே­றக்­கூ­டிய சூழல் இன்று உள்­ளது.
நான் 2016ஆம் ஆண்டு 30 பேருடன் பயிற்சி பெற்­ற­போது அவர்கள் முன்­னேற வேண்டும் என்­றுதான் வந்­தி­ருப்­பார்கள். ஆனால், கடந்த மூன்று வருட காலத்தில் எத்­தனை பேர் இவ்­வாறு பயிற்சி பெற்று வெளி­யே­றி­யி­ருப்­பார்கள்? ஆனால், எத்­தனை பேர் இது­போன்ற செய்­கை­களை மேற்­கொள்­கி­றார்கள் என்­பது கேள்­வி­யாக உள்­ளது. எதிர்­பார்க்கும் வேலை கிடைக்­கா­த­போது கிடைக்கும் வேலையை ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் செய்கிறோம். இதிலும் நம்மால் சாதிக்க முடியும். வெற்றி தோல்விகள் வரும்; போகும். ஆனால், துவண்டுவிடக்கூடாது.
நான் பயிற்சி பெற்ற காலத்தில் 40 ஆயிரம் ரூபாவை மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன் பின்னரான காலப்பகுதியில் அதிகளவான மானியங்களை வழங்கி வருகின்றார்கள். எது, எவ்வாறு இருப்பினும் பயிற்சி வழங்கிய பின்னர் அதனை சுயதொழிலாக விருப்பத்துடன் செய்கின்றபோது அவர்களுக்கான உதவித் திட்டங்கள் முறைப்படியாக வழங்க வேண்டும். அதற்கான மேற்பார்வையினையும் செய்கின்றபோது சுயதொழில் முயற்சியாளர்களை மேலும் முன் னேற்றி உயர்த்த முடியும்” என்கிறார்.

எம்.நியூட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *