Home Garden

வீட்டில் வளர்க்க கூடிய காற்றை சுத்தப்படுத்தும் செடிகள்

By  | 

வீட்டில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் செடிகளை வைத்து அலங்கரித்து, நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

மூங்கில்செடி

உங்கள் வீட்டை சுற்றிய காற்று மண்டலத்தில் சுற்றித்திரியும் அனைத்து வகையான ரசாயனங்களையும் நீக்க, மூங்கில் பனை செடி சிறந்ததாக விளங்கும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம் அதிகமாக தேவைப்படாது. அதனால் அதனை நிழலாக இருக்கும் வீட்டு பகுதியிலேயே வளர்க்கலாம். எனவே இதை துணி துவைக்கும் அறை, ஹால் அல்லது படுக்கையறையில் கூட வைப்பதற்கு உகந்த செடியாகும்.

ரப்பர் செடி

ரப்பர் செடிகள் ஆரோக்கியமாக இருக்க, அவைகளுக்கு அடர்த்தியான ஒளி, தண்ணீர் மற்றும் உரம் அதிகமான அளவில் தேவைப்படும்.

பாக்கு பனை

பாக்கு பனை கூட மூங்கில் பனையை போன்றதாகும். வில் வளைவுகளைப் போன்ற இலைகளை கொண்டுள்ள இந்த செடி, பார்ப்பவரை ஈர்க்கும் வகையிலும் அழகாகவும் இருக்க இது பெரும் உதவியாக இருக்கும்.

சாமந்திப்பூ செடி 

சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.

பாம்பு செடி

பாம்பு செடியை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள காற்றினில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால் டி ஹைடு போன்றவற்றை உறிஞ்சி, சுத்தமான காற்றினை அளிக்கும்.

கற்றாளை

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாளை காற்றில் உள்ள ஃபார்மால்டி ஹைட் என்னும்  வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கு மருந்தாக பயன்படும்.

வெள்ளால்

காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஓக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

கோல்டன் போட்டோஸ்

நாசா விஞ்ஞானிகள் அறிக்கையின் படி காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்திருக்கும் இந்தச் செடி கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை
அதிகரிக்கச் செய்யும். வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

ஸ்பைடர் பிளாண்ட்
வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும் .இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.

ஃபேர்ன்ஸ்
இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று  காணப்படும்.அதிலும் பாஸ்ட ன் ஃபேர்ன் செடி வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றி தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் இலைபோன்று க்யூட்டாக இருக்கும்.

ஜிவி

இது ஒருவகையான படர்க்கொடி இந்த கொடியும் வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்கார செடிகளில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ் துமா மற்றும் அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் வீட்டில் இதனை வளர்ப்பது நல்லது.

சைனீஸ் எவர்க்ரீன்

இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுவதில் சிறந்தது.மேலும் தற்போது நிறைய பேர் இந்த செடியை தான் வீட்டில் வளர்க்கின்றனர்.

 

மார்ஜினட்டா

செடி வளர்க்க விரும்புவோர் இந்த செடியின்அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள்.இந்த செடியானதுஅந்த அளவில் அழகோடு இருப்பதோடு அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழையவிடுகிறது மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.

பீஸ் லில்லி
வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால் பீஸ் லில்லியை வளர்த்து வாருங்கள். இது அழகுடன் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *