Quizzes

“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

By  | 

கழுதை கெட்டால் குட்­டிச்­சுவர் என்­றொரு பழ­மொழி உள்­ளது. அது ‘கழுதை கெட்டால்’ அல்ல; ‘கழு­தையின் தோல் கெட்டால்…’
கழு­தையின் தோல் கெட்டால் குட்டிச் சுவர் என்றால்…
கழு­தையில் தடித்த உடம்புத் தோலில் அரிப்பு அல்­லது புண் போன்று ஏதும் வந்தால், சாதா­ர­ண­மாக இருக்கும் சுவர்­களை விட பாதி சிதி­ல­ம­டைந்த சுவர்­களை நாடிச் சென்று தன் உடம்பை அதன் மேல் தேய்த்­துக்­கொள்ளும். காரணம், நல்ல சுவர்கள் சொர­சொ­ரப்பு அதிகம் இருக்­காது.

எனவே, அது குட்டிச் சுவர் என்று சொல்­லக்­கூ­டிய சிதி­ல­ம­டைந்த சுவர்­க­ளையே நாடும்.ஒத்த வயது இளைஞர் /இளை­ஞிகள் வழக்­கமாய் எங்­கா­வது சந்­திப்­பது, அரட்­டை­ய­டிப்­பது என்று இருப்­ப­வர்­களை வீட்டார் கழு­தை­யோடு ஒப்­பிட்டு குறிப்­பி­டு­வது வழக்­க­மாகப் போய்­விட்­டது. பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க போகி­ற­வர்கள்தானே என்று இளைஞர்/ இளை­ஞி­களை கழுதையாக்கி பெரியோர்கள் உவமானப்படுத்துகிறார்களோ என்னவோ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *