Women Achievers

அந்தரத்தில் தொங்கியபடி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண்…!

By  | 

இந்தியாவின் ஸ்கை டைவர் (skydiver) ஷீடால் மகாஜன் என்ற பெண் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுமார் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68 வது பிறந்த தினத்தை வாரணாசியில் கொண்டாடினார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

இதன்போது நேற்று இந்திய ஸ்கை டைவர் (skydiver) ஷீடால் மகாஜன் என்ற பெண்மணி 13,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கீழே குதித்து பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சுவாரஷ்யமான செயலை புகைப்படம் மற்றும் காணொளி மூலம் அப்பெண்மணி அவரின் சமூக வலைதள பக்கமான முகநூலில் பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற பிரதம மந்திரி திரு நரேந்திர மோடிஜி 13000 அடி நீள வானில் இருந்து தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சக இந்திய ஸ்கை டைவர் சுதிப் கொடவாத்தி இந்த காணொளியை எடுத்துள்ளார் என்று அந்த பதிவில் இவர் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted by Shital Mahajan on Monday, September 17, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *