Cinema

நயன்தாரா குறித்து ஜோதிகா கூறியதென்ன…?

By  | 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைப்பதாக ஜோதிகா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா குறித்து ஜோதிகா மேலும் குறிப்பிடுகையில், ”பல தடைகளைத் தாண்டி குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது.

நயன்தாரா தனக்கென்று ஒரு தனியிடத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். இது பெரிய சாதனை. ஒரு பெண்ணாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறார்.

எந்த நேரமும் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார். அது எளிதான விஷயம் இல்லை. கதாநாயகர்களை முதன்மைப்படுத்தாத படங்களில் திறமையுடன் நடிக்கிறார்.

ஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து கொடுக்கிறார். இது மிகவும் கடினமான செயல். நடிப்பது பெரிய கலையாக இருந்தாலும் எமது அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *