Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

கணவன் : சீ! காப்பியா இது? நாய்கூட இதை குடிக்காது!

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

*****************************************************************************************

மனைவி : ரோஸிங்கறது யாருங்க?

கணவன் : விழித்தபடி… அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர், ஏன் கேட்குற?

மனைவி : அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு.. அதான்.

*****************************************************************************************
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போற?

மனைவி : அவங்க அசப்பில் உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!

*****************************************************************************************

மனைவி : வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க

கணவன் : நிஜமாவா சொல்லற?

மனைவி : ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிக்கிட்டு இருக்கிறது!

*****************************************************************************************

மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா?

கணவன்: என்ன சொல்லனும்

மனைவி: அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன்: நான் ஏன் சொல்லணும்? பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

*****************************************************************************************

மனைவி: டின்னர் வேணுமா..?

கணவன்: சாய்ஸ் இருக்கா….?

மனைவி: ரெண்டு இருக்கு…

கணவன்: என்னென்ன….???

மனைவி: வேணுமா….வேண்டாமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *