Women Achievers

பெண்ணிய எழுத்தாளர் சிம­மாண்டா எங்­கோஸி அடீச்­சி

By  | 

இன்று ஆங்­கி­லத்தில் எழுதும் மிக முக்­கி­ய­மான கறுப்­பின எழுத்­தா­ளர்­களில் சிம­மாண்டா எங்­கோஸி அடீச்­சியும் ஒருவர். நைஜீ­ரி­யாவைச் சேர்ந்த இவர், இது­வரை ஆறு புத்­த­கங்­களை எழு­தி­யி­ருக்­கிறார். பெண்­ணியம் குறித்த சரி­யான புரி­தலை உண்­டாக்கும் வகையில் அமைந்­துள்­ளது இவ­ரது எழுத்து.

இவ­ருக்குக் கடந்த ஜூன் 12இல் ‘பென்’ (PEN) பரிசு அறி­விக்­கப்­பட்­டது. நோபல் பரிசு பெற்ற நாடக ஆசி­ரியர் ஹரால்ட் பிண்ட்­டரின் நினை­வாக இந்தப் பரிசு ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டன், கொமன்வெல்த் நாடு­களைச் சேர்ந்த எழுத்­தாளர் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த உல­கத்தின் மீது துணிச்­ச­லான, தடு­மாற்றம் இல்­லாத பார்­வையைக் கொண்­டி­ருக்கும் எழுத்­தா­ளர்­களைக் கௌர­விக்கும் வித­மாக இந்தப் பரிசு 9 ஆண்­டு­க­ளாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த ஆண்டு ஒக்­டோபர் 9 ஆம் திகதி அடீச்­சிக்கு இந்தப் பரிசு வழங்­கப்­பட உள்­ளது.ஏன் பெண்­ணி­ய­வா­தி­யாக இருக்க வேண்டும்?
பாலினம், நிறம், உலக அள­வி­லான சமத்­து­வ­மின்மை ஆகி­ய­வற்றின் மீது இவர் கொண்­டி­ருக்கும் நவீன அணு­கு­மு­றையே இந்தப் பரி­சுக்­காக இவர் தெரிவு செய்­யப்­பட்­ட­தற்குக் காரணம் என நடு­வர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

முக்­கி­ய­மாக, பாலினம் குறித்து இவர் கொண்­டி­ருக்கும் பார்வை, நாம் கவ­னத்தில் கொள்­ளவும் பின்­பற்­றவும் வேண்­டி­யது. ‘அப்­படி என்­ன­வி­த­மான பார்­வையைக் கொண்­டி­ருக்­கிறார்?’ என்று கேட்­ப­வர்கள், அவர் எழு­திய ‘வீ ஷுட் ஆல் பி ஃபெமினிஸ்ட்ஸ்’ எனும் புத்­த­கத்தை வாசித்தால் போதும்.
ஆபி­ரிக்­காவை மையப்­ப­டுத்தி லண்­டனில் ‘டெட்எக்ஸ் யூஸ்டன்’ எனும் அமைப்பு, 2012இல் சொற்­பொ­ழிவு ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அதில் பெண்­ணியம் குறித்துப் பேசினார் சிம­மாண்டா. அந்த உரையின் சற்றே விரி­வு­ப­டுத்­தப்­பட்ட வடி­வம்தான் இந்தப் புத்­தகம். 2014இல் வெளி­யா­னது.
‘நாம் அனை­வரும் ஏன் பெண்­ணி­ய­வா­தி­க­ளாக இருக்க வேண்டும்?’ என்ற கேள்­விதான், இந்தப் புத்­த­கத்தின் அடி­நா­த­மாக ஒலிக்­கி­றது. ‘நாம் அனை­வரும் வேறோர் உலகைக் கனவு காண வேண்டும். அந்த உல­கத்தில் ஆண்­களும் பெண்­களும் தங்­க­ளுக்குத் தாங்­களே உண்­மை­யாக நடந்­து­கொள்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். அப்­படி நடந்­து­கொள்­வதில் மகிழ வேண்டும். அப்­ப­டி­யொரு உலகைப் படைக்க, நம் மகள்­களை வித்­தி­யா­ச­மாக வளர்க்க வேண்டும். மகன்­க­ளையும் வித்­தி­யா­ச­மாக வளர்க்க வேண்டும்’ என்று அந்தப் புத்­த­கத்தில் அவரே பதிலும் தரு­கிறார்.

யாரெல்லாம் பெண்­ணி­ய­வாதி?பெண்­ணி­யத்தை மக்கள் எப்­ப­டி­யெல்லாம் தவ­றாகப் புரிந்­து­கொள்­கி­றார்கள் என்­பதைச் சுட்­டிக்­காட்ட, தன் வாழ்க்­கையில் நடந்த ஒரு சம்­ப­வத்தை இப்­படி நகைச்­சு­வை­யாகச் சொல்­கிறார் அடீச்சி:

“நான் ‘பெண்­ணி­ய­வாதி’ என்று சொன்­ன­போது, ஆண் பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர், ‘பெண்­ணி­ய­வா­திகள் எல்லாம் கவ­லை­யுடன் இருப்­ப­வர்கள்’ என்றார். அன்­றி­லி­ருந்து நான் ‘மகிழ்ச்­சி­யான பெண்­ணி­ய­வாதி’ என்று என்னை அழைத்­துக்­கொண்டேன். பிறகு, ‘பெண்­ணியம் என்­பது ஆபி­ரிக்­கர்­க­ளுக்கு ஒத்துவராது’ என்­றார்கள். அதனால் என்னை ‘மகிழ்ச்­சி­யான ஆபி­ரிக்கப் பெண்­ணி­ய­வாதி’ என்று அழைத்­துக்­கொண்டேன்.பிறகு, ‘பெண்­ணி­ய­வாதி என்றால் ஆண்­களை வெறுப்­ப­வர்கள்’ என்­றார்கள். எனவே, நான் என்னை ‘ஆண்­களை வெறுக்­காத மகிழ்ச்­சி­யான ஆபி­ரிக்கப் பெண்­ணி­ய­வாதி’ என்று கரு­திக்­கொண்டேன்.

இப்­ப­டியே செல்லச் செல்ல ஒரு கட்­டத்தில் நான் ‘ஆண்­க­ளுக்­காக இல்­லாமல் தனக்­காக ஹை ஹீல்ஸ் அணிந்­து­கொள்­கிற, ஆனால், ஆண்­களை வெறுக்­காத மகிழ்ச்­சி­யான ஆபி­ரிக்கப் பெண்­ணி­ய­வாதி’ என்னும் அள­வுக்கு வளர்ந்­து­விட்டேன்.

ஆம். ‘பெண்­ணி­ய­வாதி’ என்ற சொல் எவ்­வ­ளவு எதிர்­ம­றை­யான அடை­யா­ளங்­க­ளுடன் வரு­கி­றது? ஆண்­களை வெறுப்­ப­வ­ராக, பெண்கள் மட்­டுமே எப்­போதும் மேலோங்கி இருக்க வேண்டும் என்று நினைப்­ப­வ­ராக, மேக் அப் போட்­டுக்­கொள்ள விரும்­பா­த­வ­ராக, எப்­போதும் கோபம் கொண்­ட­வ­ராக, நகைச்­சுவை உணர்வு இல்­லா­த­வ­ராக, டியோ­டரண்ட் பயன்­ப­டுத்­தா­த­வ­ராக…”

ஏன் மாற வேண்டும்?புத்­த­கத்தின் ஓரி­டத்தில் ‘ஹோட்­ட­லுக்குச் சென்றால், ஆண்­கள்தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் எப்­படி வந்­தது? அப்­படிப் பணம் கொடுப்­பதை ஏன் ஆண்­மைக்­கு­ரிய விட­ய­மாகப் பார்க்க வேண்டும்? ஒரு பெண், சர்­வ­ருக்கு ‘டிப்ஸ்’ கொடுத்தால், அந்தப் பெண்­ணுடன் இருக்கும் ஆணுக்கு ஏன் சர்வர் நன்றி சொல்­கிறார்? அதா­வது, பெண்­ணிடம் பணமே இருக்கக் கூடாது. அப்­படி இருந்தால், அவள் கீழ்த்­த­ர­மா­னவள் என்ற சிந்­தனை எங்­கி­ருந்து வந்­தது? ஒரு பெண் ஏன் மற்­ற­வர்­களின் மன­துக்குப் பிடித்­த­வ­ளாக நடந்­து­கொள்ள வேண்டும்?’ என்று பல கேள்­வி­களை அவர் எழுப்­பு­கிறார்.

அந்தக் கேள்­வி­களை நமக்கு நாமே கேட்­டுக்­கொள்ள வேண்டும். அப்­போ­துதான் விவாதம் பிறக்கும். தீர்­வுகள் கிடைக்க வழி ஏற்­படும். வழி கிடைத்தால் கலாசாரமும் மாறும். ஏன் கலாசாரம் மாற வேண்டும்? அடீச்சியின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘கலாசாரம் மனிதர்களை உருவாக்குவதில்லை. மனிதர்கள்தான் கலாசாரங்களை உருவாக்குகிறார்கள்!’

அடீச்சி எழு­திய இரண்டு நூல் கள், ‘நாம் அனை­வரும் பெண்­ணி­ய­வா­தி­க­ளாக இருக்க வேண்டும்’, ‘ஊதா நிறச் செம்­ப­ருத்தி’ ஆகிய தலைப்­பு­களில் அணங்கு பதிப்­பக வெளி­யீ­டாக வந்­தி­ருக்­கின்­றன. இவற்றை தமிழில் மொழி­ பெ­யர்த்­தவர் ப்ரேம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *