Fashion

உலகிலேயே விலை உயர்ந்த காலணி டுபாயில் அறிமுகம்

By  | 

டுபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான காலணி தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரக்கற்களால் தயாரான காலணிகளின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது…!

“தங்கத்துலையே செருப்பு செஞ்சாலும் அத கால்லதான் போடமுடியும்; தலைல தூக்கி வைக்க முடியாது” என்ற பழமொழி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். ஐக்கிய அரபு நாடான டுபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி காலணி தயாரிக்கப்பட்டுள்ளன. இது தான் உலகின் மிக விலை உயர்ந்த, ஆடம்பர காலணி எனக் கூறப்படுகிறது. துபாயில் உள்ள நகை விற்பனை நிறுவனமான ப்பெஷன் ஜுவல்லரி  மற்றும் ஜடா டுபாய் என்ற இரு நிறுவனங்கள் இணைந்து மிக நேர்த்தியாக இந்த விலை உயர்ந்த காலணியை தயாரித்திருக்கின்றனர். இதனை முழுமையாக வடிவமைத்து தயாரிக்க 9 மாத காலம் ஆனதாக தயாரிப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

100 இற்கும் அதிகமான 15 கரட் வைரக்கற்களையும், தங்க கட்டிகளையும் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட இந்த காலணியின் மதிப்பு 17 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பில் சுமார் 286 கோடி). தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த காலணியின் அளவு ஐரோப்பிய அளவில் 36 எனவும் காலணியை வாங்குபவர்களுக்கு தக்கவாறு அளவு மாற்றப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

Diamonds, gold. The Passion Diamond Shoes.

A post shared by JADA DUBAI (@jadadubai) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *