Women Achievers

வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து பெண் பிரதமர்

By  | 

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை பெற்ற அவர், தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஜெசிந்தா.

ஆனால், யாரும் எதிர்பாரா சூழலில் தனது 3 மாதக் குழந்தை நேவ் டி அரோஹாவை சுமந்துகொண்டு ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் ஜெசிந்தாவுக்குத் துணையாக அவரின் கணவர் கிளார்க் கேபோர்ட் உடன் வந்திருந்தார்.

பிரதமருக்குத் துணையாக அவரின் கணவர் கிளார்க் கேபோர்ட் வந்ததால், அவருக்கும், அவரின் பச்சிளங் குழந்தைக்கும் ஐ.நா.சபை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. கிளாபோர்ட் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

 

பெண் தலைவர் ஒருவர் ஐ.நா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *