Beauty

கன்டிஷ்னரை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனிக்க வேண்டும்

By  | 

பயன்படுத்தும் முறை

ஷாம்பு தேய்த்து குளித்த பின்னரே கன்டிஷ்னரை பயன்படுத்த வேண்டும். எந்த விதமான கன்டிஷ்னரையும் முடியின் வேர்களில் படும்விதமாக தேய்க்கக் கூடாது. முடியில் மட்டுமே தேய்த்து 5லிருந்து 10 நிமிடம் வரை விட்டு பின் தலைமுடியை அலச வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் கன்டிஷ்னர் க்ரீம் போன்று திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் கலந்து கரைத்து பின் பயன்படுத்தலாம்.

நீளமான அடர்த்தி குறைவான முடி

நீளமான ஆனால் அடர்த்தி குறைவாக முடி உள்ளவர்கள் வால்யூமைசிங் கன்டிஷ்னரை தேர்ந்தெடுக்கலாம். இந்த கன்டிஷ்னரை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாக இருப்பது போல் தோற்றம் தரும். ஆனால் கட்டாயமாக ஹேர் டிரையர் பயன்படுத்தியே தலைமுடியை உலர்த்த வேண்டும்.

மிதமான சுருள் முடி

மிதமான அடர்த்தியுடன் சுருள் முடியை கொண்டவர்கள் மாய்ஸ்ரேச்சர் கலந்த கnடிஷ்னரை பயன்படுத்தலாம். கன்டிஷ்னரில் வேவி கேர் (wavy hair) என்று குறிப்பிடப்பட்ட கன்டிஷ்னரையே பயன்படுத்துங்கள்.

அடர்த்தியான சுருள் முடி

அதிக சுருட்டையுடன் இருப்பவர்களின் முடி பெரும்பாலும் டிரையாக இருக்கும். சீப்பினால் எவ்வளவு நேரம் தலை வாரினாலும் வணங்காமலே இருக்கும். தலை முடி வாரிய கொஞ்ச நேரத்தில் கலைந்து போய்விடும். இந்த விதமான முடி உள்ளவர்கள் டீப் கன்டிஷ்னரை பயன்படுத்த வேண்டும். டீப் கன்டிஷ்னரில் வேக்ஸ் மற்றும் எஸன்சியல் ஆயில் கலந்து இருப்பதால் வணங்காமுடிகளையும் ஒரு கேர் பேண்ட்டில் அடக்கும் அளவிற்கு மாற்றி விடும்.

ஆப்பிரிக்கன் சுருள்முடி

ஆப்பிரிக்க பெண்களுக்கு இருப்பது போல் அதிகமாக சுருள் முடி உள்ளவர்கள் முடிக்கு மாய்ஸ்ரேசரையும் கொடுக்கும் விதமான கன்டிஷ்னரை பயன்படுத்த வேண்டும். நீங்கள் வாங்கும் கன்டிஷ்னரில் ஷிய பட்டர், தேங்காய் எண்ணெய் மற்றும் மொராக்கன் ஆயுள் கலந்துள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்கு குளிக்கும் வழக்கமுள்ளவர்களும் இந்த கன்டிஷ்னரை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *