Beauty

சரும பொலிவை தரும் மூன்று வகையான வாழைப்பழ பேஸ் மாஸ்க்

By  | 

பிரகாசமான சருமத்திற்கான வாழைப்பழ மாஸ்க்

தேவையான பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழம்
  • தேன்

செய்முறை

பழுத்த வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்.

பாத்திரத்தில் வாழைப்பழத்தை இட்டு கரண்டியால் மசிக்கவும்.

பின்பு மசித்த வாழைப்பழத்துடன் தேனை சேர்த்து நன்கு கலவை செய்யவும்.

பிறகு செய்த கலவையை 15-20 நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர்  முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.

வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

சரும சுருக்கங்களுக்கான வாழைப்பழ மாஸ்க்

தேவையானப்பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழம்
  • யோகட் – 1 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 1/2 மேசைக்கரண்டி

செய்முறை

பழுத்த வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்.

பாத்திரத்தில் வாழைப்பழத்தை இட்டு கரண்டியால் மசிக்கவும்.

பின்பு மசித்த வாழைப்பழத்துடன் யோகட், எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலவை செய்யவும்.

பிறகு செய்து வைத்த கலவையை 25-30 நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர் முகத்தில் தடவி 2-3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.

வாரத்திற்கு இரண்டு தடவைகள் இப்படி செய்து வந்தால் சரும சுருக்கங்கள் மறையும்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கான வாழைப்பழ மாஸ்க்

தேவையானப்பொருட்கள்

  • பழுத்த வாழைப்பழம்
  • பேக்கிங் சோடா- 1/2 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு 12 மேசைக்கரண்டி

செய்முறை

பழுத்த வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்.

பாத்திரத்தில் வாழைப்பழத்தை இட்டு கரண்டியால் மசிக்கவும்.

பின்பு மசித்த வாழைப்பழத்துடன் பேக்கிங் சோடா, எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலவை செய்யவும்.

பிறகு செய்த கலவைவையை 10-15 நிமிடங்கள் வைக்கவும்

பின்னர் முகத்தில் தடவி 2-3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.

வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *