Home Garden

ஒர்க்கிட் பற்றிய அறிய தகவல்கள்

By  | 

ஒரு ஒர்க்கிட் செடியை வளர்க்க மிகவும் பொறுமை வேண்டும். ஒரு செடி முளைத்து பூ பூக்க, ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை ஆகுமாம். ஒர்க்கிட் செடிகள் ஒரு நாணய அளவிலிருந்து சில நூறு கிராம் எடையுள்ளது வரை காணப்படுகின்றன. உலகின் மிகச் சிறிய ஒர்க்கிட், ‘பிளாடிஸ்டீல்’ என்ற இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்கள் 2 மி.மீ. அளவே இருக்கும்.

நிலத்தில் வாழ்பவை, மற்ற செடிகளைச் சார்ந்து வாழ்பவை (epiphytes) என்று ஒர்க்கிட்டில் இரண்டு வகை உண்டு. சில வகை ஒர்க்கிட்கள் ஒட்டுண்ணிகளாக வளரும். கிழங்கு வகை ஒர்க்கிட்களும், பாறை மேல் வளரும் ஒர்க்கிட்களும் இறந்தவற்றிலிருந்து சத்துகளை எடுக்கும் ஒர்க்கிட் இனங்களும் உள்ளன.

மிக பிரபலமான 5 ஒர்க்கிட் வகைகள்

 பலாநோப்ஸ் ஒர்க்கிட் (Phalaenopsis orchid)

கால்லிய ஒர்க்கி (Cattleya orchid )

வாண்டா ஒர்க்கிட்ஸ் (Vanda orchids )

பாபியோபிடியம் ஒர்க்கிட் ( Paphiopedilum orchid )

மில்டோனியா ஒர்க்கிட் (Miltonia orchid )

இயற்கைச் சூழலில், மகரந்தச் சேர்க்கைக்கு ஒவ்வொரு ஒர்க்கிட் இனமும் ஒவ்வொரு பூச்சியைச் சார்ந்தே இருக்கும். பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் ஒர்க்கிட் இனமே அழிந்திருக்கும். பூச்சிகளைக் கவர்வதற்காகத்தான் இதன் பூக்கள் கண்ணைக் கவரும் நிறத்திலும், வடிவங்களிலும் காணப்படுகின்றன. ‘பீ ஒர்க்கிட்’ என்ற இனத்தின் மலர், பெண் தேனீ வடிவில் இருக்குமாம்.

ஒர்க்கிட் மலர்கள் ஒற்றையாகவோ அல்லது கொத்தாகவோ பூக்கும். சில ஒர்க்கிட் பூக்கள் சில மணி நேரம் மலர்ந்திருக்கும். சில வகைப் பூக்கள், ஆறு மாதங்கள் வரை வாடாமல் இருக்குமாம்.

உலகிலேயே அதிக வகையான ஒர்க்கிட்கள் பிரேசிலில் உள்ளன. மொத்தம் 3500 வகை ஒர்க்கிட்கள் இங்கே காணப்படுகின்றன. எனவே, பிரேசிலுக்கு ‘ஒர்க்கிட் மலர்களின் நாடு’ என்ற சிறப்புப் பெயர் உண்டு.

ஒர்க்கிட்டுக்கு தமிழில் ‘மந்தாரை’ என்று பெயர். சிங்கப்பூரின் தேசிய மலர் ஒரு மந்தாரைதான்.

சில வகை ஒர்க்கிட் தாவரங்கள் நூறு வருடங்கள் வரை உயிர் வாழும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *