Cookery

நவராத்திரி நைவேத்தியம் தயிர்வடை செய்முறை!

By  | 

தேவையானப் பொருட்கள்

  • உளுந்து – 200 கிராம்
  • தேங்காய் துருவல் – 1/4 கப்
  • பச்சை மிளகாய் – 4
  • தயிர் – 3 கப்
  • உப்பு – 2 தேவையான அளவு
  • மிளகு – 5
  • பெருங்காயம் – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

*உளுந்தை 1/2 உப்பு சேர்த்து பொங்க பொங்க அரைக்கவும்.

*தேவையானால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

*கிரைண்டரில் அரைக்கவும் மிக்ஸியில் அரைத்தால் மாவு பொங்காது.

*அரைத்த மாவில் மிளகு, பெருங்காயம் கறிவேப்பிலை(நறுக்கி) தேங்காய் துண்டு ( நறுக்கியது) சேர்த்து வடை தட்டவும்.

*துருவிய தேங்காய் பச்சைமிளகாய் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

*அரைத்ததுடன் தயிர் உப்பு 1/2 கொத்தமல்லி( நறுக்கியது)சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

*வெந்து எடுத்த வடைகளை சூடுடன் இருக்கும்போதே பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் வைத்து அதில் 1/2 நிமிடம் ஊற வைக்கவும்.

*ஊற வைத்த வடைகளை அரைத்து கலந்து வைத்திருப்பதுடன் சேர்க்கவும்.

*தேவையானால் காராபூந்தி தூவி அலங்கரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *