Cookery

சேமியா வெண் பொங்கல் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள் 

சேமியா – 2 கப்
பாசிப்பருப்பு – அரை கப்
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
நெய் – 2 மேசைக்கரண்டி

தாளிக்க 

மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 மேசைக்கரண்டி
முந்திரி (நறுக்கியது) – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
நெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை 

*1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்து கொள்ளவும்.

*பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள்.

*வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த சேமியா, உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து சேர்த்து நன்கு வேக விடுங்கள்.

*அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

*எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

*சூப்பரான சேமியா வெண் பொங்கல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *