Cinema

சந்தோச மழையில் கீர்த்திசுரேஷ்

By  | 

கோலிவூட் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ராசியான நடிகை என்ற பெயரை தக்க வைத்துள்ளார். விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு தற்போது மூன்று நாள் விருந்து கிடைத்துள்ளது.

அதாவது அக்டோபர் 17 ஆம் திகதி கீர்த்திசுரேஷின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 18ஆம் திகதி விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடித்த ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதனையடுத்து அக்டோபர் 19ஆம் திகதி விஜய்யுடன் கீர்த்திசுரேஷ் நடித்த ‘சர்கார்’ படத்தின் டீசர் வெளியாகிறது.

எனவே இம்மாதம் தனக்கு ட்ரப்பிள் தமாக்கா என்று மகிழ்ச்சியுடன் கீர்த்திசுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *