Cinema

இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி சின்மயி தந்த அதிர்ச்சி தகவல்

By  | 

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்ல பயந்து கொண்டு இருப்பதில்லை. அதுவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் தைரியமாகவே செயல்படுகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் #Metoo என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நிகழ்ந்த கசப்பான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பொலிவூட்டில் தனுஸ்ரீ தத்தாவும், கோலிவூட், டோலிவூட்டில் ஸ்ரீரெட்டியும் ஆரம்பித்த வைத்த புயல் தற்போது வைரமுத்து உள்பட ஒருசிலர் மீதும் பாய்ந்துள்ளது. வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பெண் கூறிய தகவலை பெண் பத்திரிகையாளர் ஒருவரும் பாடகி சின்மயியும் தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கை கிரிகெட் வீரர் லசித் மலிங்க ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதுதொடர்பாக  அந்த பெண் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் எனது தோழி தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றேன். அப்போது இலங்கை கிரிக்கெட் வீரர் தனது தோழி அவருடைய அறையில் இருப்பதாக கூறி என்னை அழைத்து சென்றார். அறைக்குள் சென்றவுடன் என்னை படுக்கையில் தள்ளி என் அருகே வர முயற்சித்தார். அவர் நல்ல உயரம், எடையுடன் இருந்ததால் அவரை என்னால் எதிர்க்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஓட்டல் ஊழியர் ஒருவர் கதவை தட்டினார். அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்,

அந்த நேரத்தில் நான் இதனை வெளியே கூறியிருந்தால் அவர் பிரபலமானவர் என்பதால் நான் தான் விரும்பி அவருடைய அறைக்கு சென்றதாக கூறிவிடுவார்கள் என்று பயந்தேன் என்று ஒரு பெண் கூறியுள்ளார். இந்த பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவத்தை சின்மயி பகிர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *