Life Style

செலவைக் குறைக்க அருமையான டிப்ஸ்

By  | 

*போக்குவரத்துச் செலவை கூடியமட்டும் குறைக்க முயலுங்கள். ஒரே பகுதியில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள், வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம்.

*தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றை அணைப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

*சில பெரும் நிறுவனங்கள், கடைகள், குறிப்பிட்ட காலத்தில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

*சிறிய கடைகளில் என்றில்லை, ஆச்சரியப்படுத்தும்வகையில், பெரிய கடைகளிலும் பேரம் பேசுவது சில நேரங்களில் பலன் கொடுக்கும். பேரம் பேச கவுரவம் பார்க்க வேண்டாம்.

*வெளியிடங்களில் சாப்பிடு வதைக் குறைத்துக்கொள்வது, பர்சுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

*திரையரங்கில் படம் பார்ப்பது செலவு பிடிக்கும் விஷயமாகிவரு கிறது. சிறிது காலம் பொறுத்திருந்தால், முறைப்படி இணையத்திலேயே பணம் செலுத்திப் பார்க்க முடியும்.

*‘ஜிம்’முக்கு பணம் கட்டிவிட்டு, போகாமல் இருப்பதைவிட, வீட்டி லேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

*பழையதாகிவிட்டது என்பதாலேயே ஒரு பொருளை தூக்கிப் போட்டுவிடாமல், அதிகபட்சம் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

*வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித்தனி செல்போன், அவற்றுக்கான செலவு தேவையா என யோசியுங்கள்.

*பணமாக எடுத்துக் கொடுப்பதைவிட, கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நாம் அதிகம் செலவழித்துவிடுகிறோம். எனவே கிரெடிட் கார்டை பர்சை விட்டு வெளியே எடுப்பதை கூடியவரை தவிருங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *