Cinema

கீர்த்தி சுரேஷ் இடத்தில் மடோனா செபாஸ்டியன்

By  | 

சுந்தரபாண்டியன்’ படத்தை அடுத்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்’ என்ற படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க அதில் சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கீர்த்திசுரேஷூக்கு பதிலாக மடோனா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

சசிகுமார், மடோனா, சூரி, யோகிபாபு மற்றும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *