Cinema

பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த சின்மயி

By  | 

பாடலாசிரியர் வைரமுத்து மீது தான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பாடகி சின்மயி, அண்மையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயினுடைய குற்றச்சாட்டை அவரது தாயாரும் உறுதி செய்துள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்துள்ளார். அத்துடன் உண்மையை காலம் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மறுப்பிற்கு, வைரமுத்து ஒரு பொய்யர் எனக்கூறி சின்மயி விளக்கமளித்துள்ளார். இவ்வாறு இந்த விவகாரம் தமிழ் திரைத்துறையில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த, பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் முகநூல் பக்கத்தில் சின்மயி நேரடி ஒளிபரப்பு ஒன்றை செய்துள்ளார்.

Posted by Chinmayi Sripada on Thursday, October 11, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *