Children

குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை தேவையா?

By  | 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளும் ஒரு பழக்க வழக்கம், படுக்கும் பொழுது தலையணை வைத்து கொள்வது. தலையணை வைத்து படுப்பதால், உடலின் இரத்த ஓட்டம் முக்கியமாக தலையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனாலும் தலையணை இல்லாமல் நம்மால் தூங்க முடியாத அளவுக்கு தலையணை பழக்கத்தை நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆக்கி விட்டோம்.! குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா? குழந்தைகளுக்கு தலையணை என்பதை நாம் பயன்படுத்த காரணமாக இருப்பது, அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையே. குழந்தைகள் கட்டிலில் உறங்கும் பொழுது, அவர்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க பெற்றோர்கள் தலையணையை வைப்பது வழக்கம். ஆனால் பல பெற்றோர்கள் குழந்தை பிறந்தவுடனேயே அவர்களை தலையணையில் படுக்க வைப்பது உண்டு. இது தவறான விஷயம்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலையணையில் படுக்க வைப்பதை தவிர்ப்பது அவசியம்.

ஏன் குழந்தைகளுக்கு கூடாது?

குழந்தைகள் பிறந்த பின்னும் கூட, அவர்களின் உடல் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். குழந்தைகள் பிறந்த ஒரு சில மாதங்கள் வரை அவர்களின் தலை நேராக இருக்காது; குழந்தைகளின் தலை நிலைபெற குறைந்தது 3 மாதங்கள் ஆவது ஆகும். குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து என இரண்டு பாகங்களும் நிலைபெறும் வரை அவர்களுக்கு தலையணையை பயன்படுத்த கூடாது. தலையணை பயன்படுத்துவது குழந்தைகளின் தலை வடிவத்தை அல்லது தலை மற்றும் கழுத்துக்கு இடையேயான இணைப்பை பாதிக்கலாம்.

குழந்தைகளுக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் தலையணை சுத்தமானதாக இல்லை என்றாலோ அல்லது அதில் ஏதேனும் தூசி, அழுக்கு போன்ற விஷயங்கள் படிந்து இருந்தாலோ அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு காரணங்களுமே குழந்தைகளுக்கு சற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடியவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *