Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 16: சிவாஜியின் மகள்

By  | 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பரபரப்பானவராக இருந்த ஆண்டளவில் ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய் ஆகிய படங்களில் ஜெயா கதாநாயகி அந்தஸ்தில் நடித்திருந்ததை தொடர்ந்து மற்றுமொரு வாய்ப்பும் கூடி வந்தது.

1966ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி வௌியான ‘மோட்டார் சந்தரம்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மூன்றாவது மகளாக நடித்திருந்தார் ஜெயா.

இதில் ஒரு முக்கிய தகவலை குறிப்பிட்டாக வேண்டும்… படம் வௌியான அதே நாள்தான் சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

முற்றிலும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் வயதான குடும்பத் தலைவனாக சிவாஜியும் அவருக்கு மனைவியாக செளகார் ஜானகியும் மூத்த மகளாக நடிகை காஞ்சனாவும் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் ஜெயாவுக்கு ஜோடியாக இணைந்து நடித்திருந்தவர் ரவிச்சந்திரன். 1964ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அறிமுகமான கதாநாயகனுக்கு இரண்டே ஆண்டுகளில் சிவாஜி கணேசன் திரைப்படத்தில் அவருக்கு மருமகனாகவும் ஜெயலலிதாவுக்கு நாயகனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் தான் என ரவி தன் நினைவுகளையும் பதிவு செய்துள்ளார்.

ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கிய பாலுவின் இயக்கத்தில், எஸ்.எஸ். வாசனின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ஜெயா தோன்றும் காட்சிகளில் சிவாஜியை அப்பா என்று அழைப்பதை ரசிகர்கள் பார்த்த விதம் புதுமை.

ஜெயா மட்டுமல்ல காஞ்சனாவுக்கும் அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் மோட்டார் சுந்தரம்பிள்ளை.

இந்தப் படத்தில் வாலி எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல்தான் ‘காத்திருந்த கண்களே…’ என்ற காதல் பாடல். இப்பாடல் மைசூர் பிருந்தாவனம் தோட்டத்தில் இப்பாடல் படமாக்கப்பட்டிருந்தது.

அதைத் தவிர துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு என்ற பாடலில் ஜெயா  உட்பட இரண்டு நடிகைகளுடன் இணைந்த குழு நடனக் காட்சியும் படமாக்கப்பட்டிருந்தது. நடிப்பில் மட்டுமல்லாமல் ஆடலிலும் தன்னை முன்னிலைப்படுத்துவதைப் போல் பாடல் காட்சிகள் அமைந்தன.

நடிப்புத் துறைக்குள் நுழைந்த புதிதில் ஆண் நடிகர்களுக்கும் சில பெண் நடிகர்களுக்கும் அப்படிப்பட்ட ஓர் அடையாளம் இருப்பது சகஜம் என்றாலும் அதற்கு விதிவிலக்கான நடிகர்களின் வரிசையில் ஜெயாவை ஒரு ஆல் இன் ஆல் அழகுராணியாகவே பலரும் பார்த்தனர்.

இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் மறுத்துவிட்டார். வயதான பல குழந்தைகளுக்கு அதுவும் வயது வந்த பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதில் தனக்கு ஆர்வமில்லை என்பதை தெரிவிக்க படத் தயாரிப்பு முயற்சியை கைவிட்டுவிட்டு, ஹிந்தியில் அதே கதையை கருவாகக் கொண்டு ‘Grihasti’ என்ற பெயரில் படமெடுத்தார். அந்தப் படமும் 1963ஆம் ஆண்டு வௌிவந்து பெரும் வெற்றி கண்டது.

அப்போதைய பம்பாய்க்கு சிவாஜி நாடகத்தில் நடிக்க சென்ற போது இந்த ஹிந்திப் படத்தை பார்த்துவிட்டு அதன் பின்னர் அதில் விருப்பம் ஏற்பட்டு தயாரிப்பாளர் வாசனை தமிழில் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்படி சில வருடங்கள் கழித்து உருவான இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களும் படத்துக்கு மெருகேற்றியிருந்த போதும் சிவாஜியின் நடிப்பு அபாரமானதே.

நடிக்க வந்த சில வருடங்களிலேயே ஜெயாவின் நடிப்பில் கவனத்தை திருப்பியவர் இவர் பின்னாளில் சிறந்த இடத்தை பெறுவார் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார். அப்போது நடித்த ஜெயாவை மட்டுமல்ல… காஞ்சனா போன்ற மற்ற நடிகைகளையும் தான்.

அத்தனை நடிகைகள் துறையில் இருந்தாலும் சிவாஜிக்கு இணையாக பல திரைப்படங்களில் ஜோடியாக அதிகமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தன்னை அடையாளப்படுத்தியவர் ஜெயாதான் என்றால் அது மறுப்பதற்கில்லை.

தொடரும்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *