Fashion

இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகும் ஜானு சுடிதார்

By  | 

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள திரைப்படம் ‘96′. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இதேபோல் இவர்களின் பள்ளிப்பருவகால கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடிக்கு இணையாக இவர்களின் ஜோடியும் பலராலும் பாராட்டப்படுகிறது.

படத்தின் எந்தவொரு இடத்திலும் த்ரிஷா ஆபாச உடையில் வரமாட்டார். படம் முழுக்க சுடிதாரும் அதற்கேற்ப துப்பட்டாவையும் மடித்து போட்டிருப்பார். இதுவே படத்தின் காதலை தூக்கிக் காட்டியது. இதனால் த்ரிஷா அணிந்திருந்த உடைகளும் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் ‘96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்ததை போன்ற உடைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த உடைகள் தற்போது பேஷன் ஆகிவிட்ட நிலையில் ட்விட்டரில் இந்த உடையை த்ரிஷா ரசிகர்கள் தெறிக்க விட்டிருக்கின்றனர். #jannudress போன்ற ஹேஷ்டேக்கையும் இதற்காக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மக்களின் மனங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப உடடினயாக அதே நிறத்தில் ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளது இளம் தலைமுறை பெண்களை குஷிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *