Cinema

எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்

By  | 

வடிவேலுவின் சொந்த ஊரான மதுரையில், எந்தவித ஆடம்பர ஏற்பாடுகளும் விளம்பரமும் இன்றி, வடிவேலு தன் மகளுக்குத் திருமணம் நடத்தியுள்ளார்.

வடிவேலுவின் மூத்த மகன் சுப்பிரமணியனுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்தத் திருமணத்துக்கு திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரமாண்ட ஏற்பாடுகள் இல்லாமல் அமைதியாக நடந்தது.

அதேபோன்று, தன் மகளின் திருமணத்தையும் எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் வடிவேலு. மதுரை ஐராவதநல்லூரில் உள்ள என்.எஸ்.சந்திர அம்மாள் திருமண மண்டபத்தில், வடிவேலுவின் மகள் கலைவாணிக்கும் ராமலிங்கம் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்தத் திருமணம் குறித்து அந்தப் பகுதியில் எந்தப் பேனரும் வைக்கப்படவில்லை. அரசியல், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், நகைச்சுவை நடிகர் பூச்சி முருகன் மட்டும் தென்படுகிறார். புகைப்படங்களைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ‘திருமணம் எளிமையான முறையில் நடக்கிறது, தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று கூறி அனுப்பிவிட்டனராம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *