Cookery

சில்லி சோயா : செய்முறைகளுடன்

By  | 

சைவஉணவு பிரியர்களுக்கு …….

தேவையான பொருட்கள் :

சோயா  (சோயா உருண்டைகள்) – 30

தக்காளி விழுது      – ஒரு மேசை கரண்டி

இஞ்சி விழுது            – ஒரு தே. கரண்டி

பச்சை மிளகாய் விழுது – ஒரு மேசை கரண்டி

சோள மா                    – 3 மேசை கரண்டி

மிளகாய்த்தூள்      – ஒரு தே. கரண்டி

தக்காளி                      –  ஒன்று

குடைமிளகாய்      –  ஒன்று

வெங்காயம்            –  ஒன்று

சீரகம்                            – ஒரு தே. கரண்டி

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பாத்திரத்தில் 2 கப் கொதிநீர் ஊற்றி அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பிறகு அதில் குளிர்ந்த நீர் ஊற்றி தண்ணீரை பிழிந்து சோயா உருண்டைகளை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

சோயா துண்டுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் தக்காளி விழுது, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சோள மா, உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும், ஊற வைத்த சோயா உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும், சீரகம் போட்டு தாளித்து பின்னர் சிறிதாக நரறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின் அதில் பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

இறுதியாக பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவிப் அலங்கரிக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *