Cinema

திருமண பந்தத்தில் இணைந்தார் வைக்கம் விஜயலட்சுமி

By  | 

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி-மிமிக்ரி கலைஞர் அனூப் இருவருக்கும் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

‘சொப்பனசுந்தரி புகழ் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும்,மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 10

ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் விஜயலட்சுமி-அனூப் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் நேற்று நடைபெற்றது. இதனை விஜயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *