Cinema

தொகுப்பாளினியாக மாறிய ஸ்ருதிஹாசன்!

By  | 

சமீபகாலமாக வெள்ளித்திரை முன்னணி நடிகர்கள் பலர் சின்னத்திரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

நடிகரும்,மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில்,நடிகை ஸ்ருதிஹாசன் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராகி இருக்கிறார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்ச்சியில் வரவுள்ள பிரபலம் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.ஸ்ருதி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் கலர்புல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *