
Women Achievers
பிறர் நலம் கருதி தன் வாழ்வை அர்ப்பணித்த பெண்
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்தவர் அய்ன். தொலை தூரத்தில் இருக்கும் வேறு நாட்டைச் சேர்ந்த கிராம மக்களின் ஏழ்மை நிலையைக் கண்டு அவர்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அந்தக் கிராமத்திற்கு சென்று, அந்த மக்களின் வாழ்வு நிலையை மாற்றியுள்ளார்.
அய்ன்(Ayn), இஸ்தான்புல் நகரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பிரின்ஸ் தீவில், ‘ஒரு நடுத்தர குடும்பத்தினர் அடைய வேண்டும்’ என்று எண்ணும் வசதி வாய்ப்பில் வாழ்ந்துவந்தார். தினமும் ஷாப்பிங், நினைக்கும் நேரத்தில் சாப்பிட நினைக்கும் உணவு என இவரின் வாழ்க்கை சந்தோசமாக சென்றது. மூன்று வருடத்திற்கு முன்பு, ஒரு நாள் எப்போதும் போல ஷாப்பிங் செய்துவிட்டு வரும் வழியில் இவர் ஒரு செய்தி பத்திரிகையைப் படித்துள்ளார். அந்தச் செய்தி பத்திரிகையில், கம்போடியா நாட்டில் இருக்கும் ஃப்னோம் பென் (Phnom Penh) என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் மாதம் வெறும் 5 டாலர்களையே சம்பாதித்து, அதை வைத்து வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி அய்னை மிகவும் பாதித்துள்ளது. அந்த ஒட்டுமொத்த கிராமமும் ஒரு மாதம் சம்பாதிக்கும் பணத்தை இவர் ஒரே நாளில் செலவழித்து வாழ்கிறார் என்ற எண்ணம் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனால் பெரும் மன உளைச்சல் அடைந்தார். இரண்டு மூன்று நாள் இதைப் பற்றி யோசித்தவர், தான் வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோசம், உண்மையான சந்தோசம் இல்லை என்பதை உணர்ந்து, அந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ வேண்டும், அந்தக் கிராம மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கம்போடியா நாட்டிற்குச் சென்றார்.
இந்தக் கிராமத்து மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றுவதற்கு முன்பு, இவர்களின் பசியை போக்கவேண்டும் என்று யோசித்து, அய்ன் இபிலிம் சூப் சமையலறை (Aynebilim Soup Kitchen) என்ற ஹோட்டலை தொடங்கினர். “உங்கள் கனவுகள் சத்தியம்” என்ற வாசகத்துடன் தொடங்கிய இந்த ஹோட்டல் உண்மையில் அந்தக் கிராமத்து மக்களின் கனவுகளை உண்மையானதாக மாற்றவந்த ஹோட்டலாக மாறியது. அங்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு உணவு அளிப்பதால் மட்டும் அவர்களின் வாழ்வு நிலை மாறாது என்று உணர்ந்த அய்ன், பள்ளி, மருத்துவமனை மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்தையும் உருவாகி வருகிறார். இங்கு வாழும் குழந்தைகளின் சந்தோசமே தனது சந்தோசம் என்று அவர்களின் சந்தோசத்திற்காக அனைத்தையும் செய்து வருகிறார்.
கடந்த 2016 ஆம் வருடம் தான், இந்தக் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் முதன்முறையாக புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர். அய்ன், இந்தச் சிறுவர்களை புத்தாண்டிற்கு புதிய ஆடை உடுத்தி வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்தச் சிறுவர்கள் தங்களது பள்ளி சீருடையை அணிந்து வந்துள்ளனர். அதுவே தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக அய்ன் தெரிவித்து வருகிறார். தனது வை நிபிலிம் சூப் சமையலறை தொண்டு நிறுவனத்திற்கு வரும் நன்கொடைகளை வைத்து இவர் இவ்வளவு மாற்றத்தையும் அந்தச் சிறிய கிராமத்தில் செய்து வருகிறார்.
0 comments