Mother

அன்னையே நீ வேண்டும் : அன்னையே ஆண்டுகள்

By  | 

அன்னையே ஆண்டுகள் இரண்டு சென்றாலும்

அயராது நீ செய்த உழைப்பு மிகையாகாது

என்வென்று கூற என் மனதில் மடிந்து கிடப்பதை

செல்வங்கள் இரண்டு பெற்று எம்மை வளர்த்து

கல்வியெனும் பாதையில் எம்மை வழிநடத்தி

இன்று ஆசிரியர் என்னும் பட்டத்தை சூட்டி தந்து

விண்ணை நோக்கி சென்றாயா?

இன்று அம்மா என்ற ஒலி நின்று விட்டது

மார்கழி மாத சங்கொலி கேட்கும் போது – வீடு

வீதி தோறும் நீ போடும் புள்ளி கோலம்

இன்று அழிந்து விட்டது

ஆலயத்தில் நீ போடும் குலவு சத்தம்

நின்று விட்டது அன்னையே

ஊரில் உன்னை புகழாதவர் யாவர்

பெண் என்றால் இப்படி – ஒரு

மானிட பெண்ணாகவும் தாயாகவும் இருந்தாயே

மானிடம் போற்றும் புகழ்

பெற்றாயே அன்னையே

அந்த காலன் உன்னை அழைத்த போதும் – உன்

உதட்டில் புன்முறுவல் பூத்தாயோ?

உன் நாமத்தில் வீற்றிருக்கும் நீ புகழ்ந்து

பாடும் அந்த அன்னை தானே – காலனுக்கு தூது விட்டார்

உன் உயிரை எடுக்க நல்ல

மானிடர்க்கு கிடைத்த வெற்றி பரிசு இதா?

அன்னையே நீ வேண்டும்

 

அம்மா – பி. மாரியாய்

பிள்ளைகள் – ரெ. பிரகாஷ்

                                 ரெ. யாழினி

                                 தவளந்தன்ன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *