Fashion

இந்த வருடம் தீபாவளிக்கு பெண்களுக்கு இது தான் இஸ்பெஷல்  – அபாயா ஸ்டைல் சுடிதார்

By  | 

ஒவ்வொரு பண்டிகைக்கும் பெண்களுக்கென்று விசேடமாக தயாரிக்கப்பட்ட ஆடைகள் அறிமுகமாவது சிறப்பு.

தீபாவளி என்றால் இன்னமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை எதிர்பார்க்கலாம். இந்த வருடம் ஆடை வடிவமைப்பாளர்களின் கூடுதல் கவனத்துடன் உருவாகி உள்ள ஆடைதான் அபாயா ஸ்டைல் சுடிதார்.  இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அணிபவர்களுக்கு மட்டுமே அதிலிருந்து மாறுபட்டது என்பதை அறியமுடியும்.

இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற அபாயா என்ற ஆடையை அடிப்படையாக கொண்டு அபாயா ஸ்டைல் சுடிதார் காமீஸ் முழு நீள உடையாகும். அதன்  அழகிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு சல்வார் காமீஸாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக வேலைப்பாட்டுடன் கூடிய நவநாகரீக ஆடையாக மாற்றம் பெற்றுள்ள சுடிதார் காமீஸ்  பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

அபாயா ஸ்டைல் சுடிதாரின் சிறப்புகள்:

அபாயா ஸ்டைல் சுடிதார்  பாக்ஸ் ஜாக்கெட் மற்றும் நெட் துணிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்ச வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படும் கரைப்பகுதி, தோள்பகுதி, கழுத்துப்பகுதி என்பன  ஓவிய வேலைப்பாடுகளால் நெய்யப்பட்டுள்ளது.

மேலும்  பாரம்பரிய அலங்காரங்கள் கைவினைகளைஞர்களை  கொண்டு பூ வேலைப்பாடு, கட்தானா பணி, ஜரிகை வேலைப்பாடு, கோட்டாபட்டி, தோனி எம்ப்ராய்டரி, காஷிபா, ரேஷம் எம்ப்ராய்டரி மற்றும் கல் பதியப்பட்டது என அதிக கலையம்சங்களுடன் தனிநேர்த்தியுடன் தயாரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *