Beauty

பண்டிகை காலத்தில் பார்ளர் போகாமல் உங்கள் முகத்தை பளபளக்கச்செய்ய சில டிப்ஸ்..

By  | 

பண்டிகை காலத்தில் எல்லா வேளைகளையும் தனி ஆளாக செய்வதால் உங்களுடைய தேவைகளை செய்வதற்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். கவலையை விடுங்கள். வீட்டில் இருந்தே நீங்களும் ஜொலிக்கலாம், இந்த குறிப்புகளை முயற்சி செய்க.

கொத்தமல்லி மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் தடவ வேண்டும். நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும்.

எலுமிச்சம்பழம் ஒன்றை பிழிந்து அதன் சாற்றுடன் இரண்டு மேசைக்கரண்டி தயிர் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புது பொலிவு தரும்.

பாலுடன், அரிசி சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பூசி 15 நிமிடத்தின் பின்பு கழுவி விடவும். அரிசி மா மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பாகவும் பயன்படும். சருமத் துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும். முக அழகை கூட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *