Health

ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை…!

By  | 

கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், எந்த மருந்தும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.

பசலைக்கீரையின் இளந்தளிரை சாறு எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்து வந்தால், உடல் ஆரோக்கியம் பெறும். மேலும், எந்த வகையிலாவது பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் வாந்தி, ஈரல் உபாதைகள், நீரடைப்பு, மூத்திரக்கடுப்பு நோய்கள் குணமாகும்.

பசுவெண்ணெயுடன் பசலைக்கீரை சேர்த்து அரைத்து தடவினால், அக்கி சரியாகும். பசலைக்கீரையுடன் பூண்டு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.

இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும்.

இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும்.
பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர Tonic!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *