Cinema

வந்தா ராஜாவாத்தான் வருவேன்; சிம்புவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

By  | 

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. இப்படம் அதிக வசூள் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், நான்கு விருதுகளையும் தட்டி சென்றது. இத்திரைப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழிலும் உருவாகி வருகிறது. ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தினை இயக்குநர் சுந்தர்.சி இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றார். இவர்களுடன் கேத்ரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிப்ஹொப் ஆதி இசையமைக்கின்றார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் போஸ்டரினையும், படத்தின் தலைப்பினையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரான சிம்புவின் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *