Cookery

ஈஸி இன்ஸ்டன்ட் கோக்கனட் புடிங்…!

By  | 

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – 1/4 கப்

கன்டென்ஸ்ட் மில்க் – 1/2 டின்

ஜெலட்டின் – 3 டீஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

தேங்காய் பால் பொடி – 1/2 கப்

பால் பொடி – 1 கப்

தண்ணீர் – 2 கப்

செய்முறை :

முதலில் ஜெலட்டினில் 1/4 கப் சுடு நீர் ஊற்றி ஊறவிடவும் மற்ற பொருட்களாகிய பால் பொடி, தேங்காய் பால் பொடி, கன்டென்ஸ்ட் மில்க் மற்றும் சர்க்கரை (சரிபார்த்த பின்) யை ப்லென்டரில் சேர்த்து சுடு நீர் 2 கப் சேர்த்து ஊறிய ஜெலட்டினும் சேர்த்து அடித்து எடுக்கவும்.

ஜவ்வரிசியை ஊறவிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து கலந்து வைத்த பால் கலவையுடன் கலந்து சதுரமான ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி செட் செய்யவும்.. சூடு ஆறியதும் 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் குளிர்ந்துவிடும் சுவையான கோக்கனட் புட்டிங் ரெடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *