Cinema

மாரி 2 ; ‘அராத்து ஆனந்தி’ யாக சாய் பல்லவி…!

By  | 

மாரி 2 திரைப்படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை இன்று தொடக்கம் படக்குழுவினர் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் கதாப்பாத்திரம் குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் படி, சாய்பல்லவி ‘அராத்து ஆனந்தி’ என்னும் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாரி’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 படம் தற்போது உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து படத்தின் போஸ்ட புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வந்தது. விரைவில் இப்படம் வெளியீட்டுக்கு தயாராகிவிடும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *