Cookery

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரவா டோஸ்ட் செய்முறை!

By  | 

தேவையானவை பொருட்கள்

  • வறுத்த ரவை – 1 கப்
  • பால் கிரீம் – 1 கப்
  • துருவிய கேரட் – 1
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
  • பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 1/2
  • உப்பு – சிறிதளவு
  • மிளகுத்தூள் – சுவைக்காக
  • நெய் – சிறிதளவு
  • பிரெட் ஸ்லைஸ் – 2 அல்லது 3

செய்முறை
பிரெட், நெய்யைத் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.

ஒரு பிரெட்டை எடுத்து, அதில் கலந்து வைத்த ரவா கலவையைக் கொஞ்சம் எடுத்து பிரெட்டின் ஒருபுறம் தடவ வேண்டும்.

தவாவை சூடு செய்து, அதில் நெய்யை ஊற்றித் தடவிக் கொள்ளவும்.

ரவை கலவையைத் தடவிய பக்கமாகத் தவாவில் போட்டு சுட வேண்டும்.

லேசான பிரவுன் நிறத்தில் இருபுறமும் வரவேண்டும். அதுவரை பிரெட்டை டோஸ்ட் செய்யவும்.

இதோ உங்கள் செல்ல குழந்தைகளுக்கான டேஸ்டி, ஹெல்தி, ஈஸி ரவா டோஸ்ட் ரெடி…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *