Cinema

“நீங்க சொல்ற ஹலோ இருக்கே வேற லெவல்” காற்றின் மொழியில் அசத்தும் ஜோதிகா

By  | 

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் `துமாரி சுலு.’ இப்படத்தின் ரீமேக்கைத் தமிழில் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். ஜோதிகா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அவ்வப்போது இப்படத்தின் புகைப்படங்கள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வந்தது. இந்த நிலையில்,`காற்றின் மொழி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

குறும்புத்தனமான இல்லத்தரசி ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளியாகியுள்ளது காற்றின் மொழி டிரெய்லர். நவம்பர் 16 ஆம் திகதி இப்படம் வெளியாகவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *