உருளைக்கிழங்கு மசாலா பூரி: செய்முறைகளுடன்...!

March 12,2018

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
உருளைக் கிழங்கு - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


செய்முறை :
உருளைக் கிழங்கை இரண்டையும் வேகவைத்துக்கொள்ளவும்.

வேக வைத்த உருளைக் கிழங்கைத் தோலுரித்து அதனுடன் சிறிதளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். 

அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். 

இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி போல் தேய்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்

சூப்பரான மசாலா பூரி ரெடி.