கான்வாஸ் ஷூவை எப்படி உடனடியாக பளிச்சென்று மாற்றலாம்?

November,08,2017

வொயிட் கான்வர்ஸ் ஷூ நிலையான ஒன்றாகும். இது ரெம்ப செளகரியமாகவும் ஸ்டைலிஸாகவும் இருக்கும். இந்த ஷூவிற்காக எதை வேண்டுமானாலும் விட்டு விடலாம். நடக்கும் போதே ஒரு அழகான கெத்தான தோற்றத்தை கொடுக்கும். ஆனால் அதில் அழுக்குகள் நிறைந்து இருப்பது கண்டிப்பாக நல்லா இருக்காது. இதை மழைக்காலத்தில் பயன்படுத்தினாலும் வொயிட் கலர் என்பதால் அதிகமான அழுக்குகள் படிய வாய்ப்புள்ளது. உங்களுக்கு தகுந்த நேரம் கிடைக்காத பரபரப்பான இந்த வாழ்க்கையில் இந்த வொயிட் ஷூவை எப்படி சுத்தம் படுத்த போகிறீர்கள். எனவே உங்களுக்காக 6 சூப்பர் டக்கரான க்ளீனிங் டிப்ஸ்களை கொடுக்க உள்ளோம். இது விரைவாக எளிதாக சீக்கிரமாகவே சுத்தம் செய்து விடலாம். ஈஸியாக சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.

க்ளீனிங் வொயிட் கான்வர்ஸ் ஷூ முதலில் ஷூ வின் லேசை அவிழ்த்து விட வேண்டும். குளிர்ந்த நீரில் கழுவி நனைய வைக்க வேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி க்ளீனிங் ஏஜெண்ட் கொண்டு பிரஷ்யை கொண்டு தேய்க்க வேண்டும் ஷூவின் எல்லா பக்கமும் விளம்புகள், என்று படும் படி தேய்க்க வேண்டும் . குளிர்ந்த நீரில் கழுவி வாஷிங் மெஷினில் அலச வேண்டும். நன்றாக தொங்க விட்டு ட்ரை பண்ண வேண்டும். ட்ரையர் எதுவும் பயன்படுத்த வேண்டாம். வொயிட் கான்வர்ஸ் ஷூ வை சுத்தம் செய்ய 6 அற்புதமான வழிகள்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

தேவையான பொருட்கள்

வினிகர் பேக்கிங் சோடா பிரஷ் மற்றும் தேய்க்கிறது ஒரு கண்ணாடி பெளல். சுடு தண்ணீர் பழைய டூத் பிரஷ்

பயன்படுத்தும் முறை : ஒரு கிளாஸ் பெளலில் ஒரு பங்கு பேக்கிங் சோடா இரண்டு பங்கு வினிகர் சேர்க்க வேண்டும். அதனுடன் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்க வேண்டும் உங்கள் தேவைக்கேற்ப அளவை அதிகப்படுத்தி கொள்ளவும் பழைய பிரஷ்யை எடுத்து ஷூ முழுவதும் சில நிமிடங்கள் தேய்க்க வேண்டும் இதே செய்முறையை தேவை என்றால் திரும்பவும் செய்து கொள்ளலாம். இப்பொழுது வாஷிங் மெஷினில் போட்டு நன்றாக அலச வேண்டும் பிறகு தொங்க விட்டு காய விடவும்

டூத் பேஸ்ட் டூத் பேஸ்ட் பழைய டூத் பிரஷ்
பயன்படுத்தும் முறை டூத் பேஸ்ட்டை ஷூவின் அழுக்கு உள்ள இடங்களில் அப்ளே செய்ய வேண்டும் வொயிட் பேஸ்ட் பயன்படுத்துங்கள். ஜெல் அல்லது கலர் பேஸ்ட் வேண்டாம். பிறகு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு ஷூவை தண்ணீரில் அலச வேண்டும். அல்லது வாஷிங் மெஷினில் அலசவும். பிறகு தொங்க விட்டு காய விடவும், இந்த முறையை திரும்பவும் செய்யவும்

ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா தேவையான பொருட்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு பேக்கிங் சோடா வெதுவெதுப்பான நீர். பழைய டூத் பிரஷ் கை உறை

செய்முறை ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா உடன் 1/2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் சுடுதண்ணீர் சேர்க்கவும் நன்றாக பேஸ்ட் தயாரிக்கவும் ஷூ முழுவதும் அல்லது அழுக்கு படிந்த இடங்களில் பேஸ்ட்டை தடவவும் 30 நிமிடங்கள் காய விடவும் நன்றாக தண்ணீர் கொண்டு கழுவலாம் அல்லது வாஷிங் மெஷினில் போட்டு அலச வேண்டும் கைஉறை அணிந்து கொண்டு எடுத்து உலர வைக்கவும்

ப்ளீச்

தேவையான பொருட்கள்

ப்ளீச் ,டூத் பேஸ்ட், பேக்கிங் சோடா ,டூத் பிரஷ், லெமன்

பயன்படுத்தும் முறை

லிக்யூட் ப்ளீச் செய்ய 50 மில்லி க்ளீனிங் ஏஜெண்ட் தேவைப்படுகிறது ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட்டை எடுத்து கொள்ளவும் பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கொஞ்சம் நீர்ம பதத்திற்கு ஆக்கி கொள்ளவும் ஷூ முழுவதும் நன்றாக தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு குளிர்ந்த நீர் அல்லது வாஷிங் மெஷினில் அலச வேண்டும் இந்த முறைக்கு பதிலாக லெமன் மற்றும் பேக்கிங் சோடாவை ஷூ வில் தேய்க்கலாம். ஏனெனில் லெமன் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. ஆனால் இந்த லெமன் முறை உங்கள் ஷூவை பழைய அல்லது மங்கிய நிறத்தில் மாற்றக் கூடும். 

பேக்கிங் சோடா, டிடர்ஜெண்ட், மற்றும் தண்ணீர் தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா டிடர்ஜெண்ட் தண்ணீர் பழைய டூத் பிரஷ்

செய்முறை

பேக்கிங் சோடா மற்றும் டிடர்ஜெண்ட்களை சரியான அளவில் எடுத்து கொள்ளவும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான நீர்ம பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும் இதை உங்கள் ஷூவில் எல்லா பக்கமும் படும்படி தேய்க்க வேண்டும் ஷூவின் லேஸையும் இந்த கலவையில் ஊற வைக்க வேண்டும் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் ஷூவை தண்ணீர் கொண்டு அலசலாம் அல்லது வாஷிங் மெஷினில் போட்டு அலசலாம் பிறகு தொங்க விட்டு உலர வைக்க வேண்டும்

நெயில் பாலிஷ் ரிமூவர் மற்றும் அசிடோன் தேவையான பொருட்கள் நெயில் பாலிஷ் ரிமூவர் அசிடோன். காட்டன் பஞ்சு பயன்படுத்தும் முறை காட்டன் பஞ்சை அசிடோன் மற்றும் நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்து கொள்ள வேண்டும். ஷூவில் அழுக்கு படிந்த இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும் நன்றாக முழுவதும் தேய்க்க வேண்டும் லிக்யூட் சோப் அல்லது பவுடர் கொண்டு அலச வேண்டும் வாஷிங் மெஷினில் போட்டு அலசி உலர விட வேண்டும் இது உங்களுக்கு நல்ல பயனை கொடுக்காவிட்டாலும் அவசரத்திற்கு இந்த முறை உதவியாக இருக்கும்.