நீங்கள்   அலுவலகத்தில் அடிக்கடி உறங்குகிறீர்களா? : இது எதன் அறிகுறி தெரியுமா..?

February 07, 2018

அடிக்கடி கொட்டாவி, ஒருவித மந்த நிலையுடன் கூடிய சோர்வு அலுவலத்தில் பணிபுரியும் பலருக்கும் இயல்பாகவே ஏற்படும் ஒன்றாகத்தான் இருந்து வருகின்றது. இதற்கான காரணம் என்ன?

இந்த சோர்வு நிலைக்கு காரணம் அவருடைய மனமே. அதாவது வீட்டில், அல்லது சுற்றுலா செல்லும்போது ஒருவர் மனநிறைவுடன் காணப்படுவார். இந்த சந்தர்ப்பங்களின் அவர் தனக்கு பிடித்தமான செயல்களையே செய்து வருவார்.

ஆனால் அலுவலகம் செல்லும் ஒருவர் கட்டாயத்தின்ட பேரில் தனக்கு பிடிக்காதவற்றையும் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அல்லது முழுமனத் திருப்தியுடன் தனது பணியில் ஈடுபடுவது இல்லை இதன் காரணமாகவே உறக்கமும், மந்தநிலையும் ஏற்படுகின்றது.

ஆர்வத்தோடு ஒரு செயலில் ஈடுபடாத போது அச்சமயம் மூளையில் சுரக்கும் சுரப்பிகள் வெறுப்புணர்வினை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதனால் மனநிலையும் தாமாக சோர்வை அடைந்து உறக்கத்தை ஏற்படுத்துகின்றது.

எப்போதும் ஒருவர் பிடித்த விடயத்தினை, (செயலினைச்) செய்யும் போது அதனால் சோர்வும், உறக்கமும் ஏற்படுவதில்லை. மாறாக தன் விருப்பமின்றி மனத்திருப்தியற்ற நிலையில் ஒரு செயலில் ஈடுபடும்போதே உறக்கம் ஏற்படுகின்றது இந்த விடயமே அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் உறக்கம் ஏற்படக்காரணம்.

அலுவலகம் செல்லும் ஒருவர் நிர்பந்தம், கட்டாயம், வெறுப்புணர்வு போன்ற திருப்தியற்ற மனநிலையில் பணிசெய்ய ஆரம்பித்தால் அன்று உறங்கி வழியவேண்டியது தான். திருத்தியோடு கூடிய செயல் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இந்த நிலையினை தவிர்த்துக் கொள்வதற்காகவே பிரபல நிறுவனங்கள் (வெற்றி பெற்றுவரும் நிறுவனங்கள்) தமது அலுவலகத்தினை பணியாளர்களுக்கு விருப்பமான முறையில் அமைத்து வருகின்றன.

உதாரணமாக கூகுள் நிறுவனத்தினை எடுத்துக்கொள்ளும் போது அங்கே பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் குறைவு, அவர்களுக்கு விளையாடும் சுதந்திரம், தேவைக்கு இனிப்புகள், இன்பமயமான சூழல் போன்ற அனைத்தும் வழங்குகின்றது.

இதுவே அந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றிகளைச் சாதித்து வருவதற்கு காரணமாகவே அமைகின்றது. ஒருவகையில் நிறுவனம் ஒன்றின் வெற்றிக்கு ஊழியர்கள் மட்டுமல்லாது அலுவலகமும் காரணமாக அமைகின்றதுஎன்றும் சொல்லிவிடலாம்