பெண் பாவையை மணந்த மணமகன்: வியத்தகு காரணம்..!

February 22, 2018

ஆண் ஒருவர் பெண் பாவையை திருமணம் புரிந்துக்கொண்ட சம்பவமொன்று நைஜீரியாவில் இடம் பெற்றுள்ளது.

இத்திருமணம், கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. மேலைத்தேய கலாசாரத்திற்கமைய உடை அணிந்து வந்தார் மாப்பிள்ளை. சிறிது நேரத்தில் குறித்த கலாசாரத்திற்கு ஏற்றவாறே வெள்ளை உடை அணிவிக்கப்பட்ட பெண் பாவை ஒன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பின்னர் மணமகளான பெண் பாவைக்கு மணமகன் மோதிரம் அணிவித்து திருமணம் புரிந்தக்கொண்டுள்ளார்.

இந்த செயலை கண்டு அருகிலுள்ளவர்கள் ஆச்சரியத்தில் வியப்புடன் நோக்கியுள்ளனர். மணமகன் பாவையை திருமணம் செய்துக்கொண்டாலும், இவர்களின் திருமணத்தினை பதிவு செய்ய முடியாது என விவாகப்பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மணமகன் பெண் பாவையின் அழகே தன்னை கவர்ந்ததாகவும், வாழ்வுள்ளவரை தாம் இந்த பாவையுடனேயே வாழ்வேன் எனவும் அறிவித்துள்ளார்.